குறை சொல்ல முடியாத தேர்வு: அமைச்சர் என்.ஆர்.சிவபதி

 ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட்ட தேர்வு யாரும் விரல் நீட்டி குறை காட்ட முடியாத தேர்வு என அமைச்சர் என்.ஆர்.சிவபதி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பணிநியமன உத்தரவுகளை வழங்கும் விழாவில் அவர் ஆற்றிய முன்னிலை உரை:
அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், ஒன்றரை ஆண்டுகளுக்குள் 59 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் அறிவித்தார். இப்போது, 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களை
நியமித்துள்ளோம். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தேர்வு யாரும் விரல் நீட்டி சுட்டிக் காட்டி குறை சொல்ல முடியாதபடி நடைபெற்ற தேர்வாகும். ஒரே நேரத்தில் 20 ஆயிரத்து 920 பேருக்கு பணியிடங்களுக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் நலன் காக்கும் நல்ல ஆட்சியில் அறப்பணியை மேற்கொள்ள நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றார் அமைச்சர் சிவபதி. மாவட்ட வாரிய அமைச்சர்கள்: தகுதித் தேர்வு மூலம், தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் அவர்களுடைய மாவட்ட வாரியாக அமர வைக்கப்பட்டு இருந்தனர். முதல்வரின் தொகுதியான ஸ்ரீரங்கம் தொகுதி அடங்கி வரும் மாவட்டமும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதியின் சொந்த மாவட்டமுமான திருச்சியைச் சேர்ந்தவர்களும் முதல் வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த இயக்குநர்கள் அனைவரும் ஒரே நிறத்தில் சட்டை, பேண்ட் அணிந்திருந்தனர். ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்தவர்களுக்கு அவர்களின் இருக்கைகளுக்குச் சென்று அந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் பணிநியமன உத்தரவுகளை வழங்கினர்.
உத்தரவுகளைப் பெற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும், அவர்கள் பஸ்களில் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். குறுகிய காலத்தில் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்தமைக்காக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு புதிய ஆசிரியர்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...