மத்திய நிர்வாக தீர்ப்பாய உறுப்பினர் நியமனம்

சென்னையில் உள்ள, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின், நீதித்துறை உறுப்பினராக, கே.இளங்கோ, மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் நியமனம், இடமாற்றம்,
"சஸ்பெண்ட், டிஸ்மிஸ்' மற்றும் பணி விதிகள் தொடர்பான வழக்குகளை, மத்திய நிர்வாக தீர்ப்பாயம் விசாரிக்கிறது. சென்னை ஐகோர்ட் வளாகத்தில், தீர்ப்பாயம் செயல்படுகிறது. இந்த தீர்ப்பாயத்தில், நீதித்துறையைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரும், நிர்வாக உறுப்பினராக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், செயல்படுவர். தீர்ப்பாயத்தின், நீதித்துறை உறுப்பினராக, பதவி வகித்த, இளங்கோ, கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். மீண்டும், தீர்ப்பாய உறுப்பினராக, இளங்கோ நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, ஜனாதிபதி பிறப்பித்துள்ளார். இவர், ஐந்து ஆண்டு காலம், அல்லது 65 வயது, இதில் எது முந்தி வருகிறதோ, அதுவரை, பதவி வகிப்பார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...