பொறியியல் மாணவர்களுக்கு கையடக்கக் கருவியில் பாடங்கள்

பி.இ., பி.டெக். படிக்கும் மாணவர்களுக்காக கையடக்கக் கருவியில் ("டேப்லட் கம்ப்யூட்டர்') படிக்கும் வகையில் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
போதி ஆக்சஸ் சொல்யூஷன்ஸ், பி.எஸ்.என்.எல்., டெராகம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்தப் பாடத்திட்டம் மற்றும் டேப்லட் கம்ப்யூட்டர் ஆகியவை
சென்னையில் புதன்கிழமை வெளியிடப்பட்டன.
பொறியியல் பாடத்தில் மொத்தம் 7 துறைகளில் உள்ள 231 பாடங்கள் 2-டி, 3-டி தொழில்நுட்பத்தின் உதவியுடன் காட்சிகளாக படமாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் தகுதியான விரிவுரையாளர்கள் இல்லாத நிலையில் தரமான பொறியியல் மாணவர்களை உருவாக்க இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறினார். 
வைஃபை இணைப்புடன் கூடிய டேப்லட் கம்ப்யூட்டர், பி.எஸ்.என்.ல். சிம்கார்டு, பொறியியல் பாடத்திட்டம் ஆகிய மூன்றும் ரூ.5,699 முதல் ரூ.12,699 வரை பல்வேறு திட்டங்களில் கிடைக்கிறது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களிலும் இந்தக் கருவியைப் பெற்றுக் கொள்ளலாம் என்று பி.எஸ்.என்.எல். மூத்த பொதுமேலாளர் ஆர்.ரமேஷ் கூறினார்.
அதேபோல், போதி ஆக்சஸ் நிறுவனத்தின் ஜ்ஜ்ஜ்.க்ஷர்க்ட்ண்ஹஸ்ரீஸ்ரீங்ள்ள்.ஸ்ரீர்ம் இணையதளத்திலும் இந்தப் பாடத்திட்டங்கள் உள்ளன. ஒரு செமஸ்டருக்குத் தேவையான பாடங்கள் ரூ.500 விலையில் இந்த இணையதளத்திலிருந்து கம்ப்யூட்டர், லேப்-டாப் போன்ற சாதனங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்தப் ஆன்-லைன் பாடங்கள் மற்றும் கருவிகளை அறிமுகப்படுத்தி பாலகுருசாமி பேசியது:
இந்தியா முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் 40 சதவீதத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. ஊரகப் பகுதிகளில் தொடங்கப்பட்டுóள்ள கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளைக் கற்றுத்தர போதிய திறமையான ஆசிரியர்கள் இல்லை.
இந்தக் கல்லூரிகளில் நூலகங்களும் போதுமான வசதிகளுடன் இல்லை. இந்தத் திட்டத்தின் மூலம் கடைகோடியில் உள்ள மாணவர்களும் சிறந்த பொறியியல் கல்வியைப் பெறலாம்.
இதில் உள்ள சாஃப்ட்வேர் மூலம் மாணவர்கள் எந்த அளவுக்குப் பொறியியல் பாடத்தைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை அறியும் வசதியும் உள்ளது. பொறியியல் மட்டுமில்லாமல் அனைத்து வகையான கல்விக்கும் இதுபோன்ற கற்றல் முறையைக் கொண்டுவரலாம் என்றார் அவர்.
அகில இந்திய அளவிலான இந்தத் திட்டம் முதன்முதலாக சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்தும் எண்ணம் உள்ளதாக பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் தெரிவித்தனர்.
போதி ஆக்சஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரமேஷ், இயக்குநர்கள் எம்.எம். இளங்கோ, எம்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...