அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரி சீருடை : முதல்வர் அறிவிப்பு


""அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை வழங்கப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார் சென்னை, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதா தலைமையில், மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் கலந்து கொண்ட மூன்று நாட்கள் மாநாடு நடந்தது. மாநாட்டின் முதல் நாளில், கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள்
இருவரும் கலந்து கொண்டனர். இரண்டாம் நாளில், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மூன்றாம் நாளான நேற்று, போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில், மாவட்டங்கள் தோறும் கலெக்டர்கள் மற்றும் போலீஸ் எஸ்.பி.,க்களுக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டு, அவர்கள் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன. இறுதியில், சிறப்பாகச் செயல்பட்ட கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுக்கு விருதுகளை, முதல்வர் வழங்கினார். மாநாட்டு முடிவில், முதல்வர், மாவட்ட கலெக்டர், எஸ்.பி.,க்களுக்கு அறிவுரைகள் வழங்கியதுடன், மாவட்ட வாரியாக, 343 அறிவிப்புகளையும் வெளியிட்டார். அப்போது அவர் பேசும் போது, ""மக்கள் வாழ்க்கையில் முன்னேறத் தேவையான வாய்ப்புகளையும், நம்பிக்கையையும் வழங்குவதில், நாம் உதவி செய்ய வேண்டும். அந்த இலக்கை அடைய, இந்த மாநாடு மூலம், பல்வேறு ஆலோசனைகள், திட்ட ங்களாக வடிவம் பெற்றுள்ளன,'' என்றார்.

தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: திருவாரூர் மாவட்டத்தில், 4,000 இடங்களில், நிலத்தடி நீர் தேக்குவதற்கான உறைகிணறுகளை அமைக்க, 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை கிரிவலம் மற்றும் அந்த கோவில் தொடர்பான, திருவிழாக்களுக்கான அனைத்து செலவையும், இந்து சமய அறநிலையத் துறை ஏற்கும். திருவண்ணாமலையில், 14 கி.மீ., கிரிவலப்பாதை, மேம்படுத்தப்பட்டு, அகலப்படுத்தப்படுவதுடன், அவசர கால பாதையும் ஏற்படுத்தப்படும்.
எய்ட்ஸ், புற்றுநோய் மற்றும் காச நோய்க்கு, ஒதுக்கப்பட்டுள்ள நிதி, டயாலசிஸ் செய்வோருக்கும் நீட்டிக்கப்படுகிறது. நில ஆவணங்கள் தொடர்பான, பல்வேறு மென் பொருட்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, 32 நக்சல் ஆதிக்கமுள்ள கிராமங்களின் மேம்பாட்டிற்காக, 20 கோடி ரூபா# நிதி ஒதுக்கப்படும். மேலும், தர்மபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை, சிட்கோ தொழிற்பேட்டை ஆகியவை அமைக்கப் படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில், கப்பல் கட்டும் தளம் மற்றும் தொழிற்சாலைகள் வசதிக்காக, பொது, தனியார் பங்களிப்பில், சுத்திகரிப்பு மையம் அமைக்கப்படுகிறது.
சென்னை, எழும்பூரில் உள்ள போலீஸ் மருத்துவமனை, நவீன உபகரணங்களுடன் தரம் உயர்த்தப்படுகிறது. எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், போலீசாருக்கான தனி உணவகம் அமைக்கப்படுகிறது. புழல் மத்திய சிறையில், மூன்று கோடி ரூபாய் மதிப்பில், சூரிய மின்சக்தி உற்பத்தி அமைப்பு உருவாக்கப்படும்.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஒரே மாதிரியான சீருடை வழங்கப்படும். ஊட்டி உள்ளிட்ட மலைப்பகுதி பள்ளி மாணவர்களுக்கு, கம்பளி இணைந்த சீருடை வழங்கப்படும்.
தொடக்கக் கல்வி பாடத் திட்டத்தில், ஜாதியற்ற சமூகம் தொடர்பான பாடமும், பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், சைபர் கிரைம் குறித்த பாடமும் சேர்க்கப்படும்.
திருவள்ளூர், கரூர், ராமநாதபுரம், ஊட்டி மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் நிலைக்கு தரம் உயர்த்தப்படுகிறது. விருதுநகர், தர்மபுரி, தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப் படுகின்றன. இவை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை, முதல்வர் வெளியிட்டார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...