சிறுபான்மையின மாணவர் கவனத்துக்கு...

தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவியர் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை விண்ணப்பத்தை டிச. 31-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம்.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள், முந்தைய ஆண்டு தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்துக்கு உள்பட்டு இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் ஏற்கெனவே கல்வி உதவித் தொகை பெற்றவர்கள் தங்களது விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்ப படிவத்தை படியிறக்கம் செய்து கையொப்பமிட்டு முந்தைய ஆண்டு தேர்வு மதிப்பெண் சான்று, வருமானச் சான்று, வங்கிக் கணக்கு எண் ஆகிய விவரங்களுடன் கல்லூரி நிர்வாகத்துக்கு அனுப்ப வேண்டும்.
புதுப்பித்தல் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 2013, ஜன. 10-ம் தேதிக்குள் சிறுபான்மையினர் நல ஆணையத்துக்கு அனுப்பப்பட்ட விவரத்தை கல்லூரி நிர்வாகத்தை அணுகி தெரிந்து கொள்ள லாம் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...