வேலைக்கு தகுதியில்லை என்றதால் டிஆர்பி அலுவலகத்தை பட்டதாரிகள் முற்றுகை

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடந்த சான்று சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு நேற்று மீண்டும் சான்று சரிபார்ப்பு நடந்தது. அப்போது சில படிப்புகளை வேலைக்கு தகுதி இல்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தள்ளுபடி செய்தது. இதனால் பட்டதாரிகள் ஆத்திரம் அடைந்து திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
ஆசிரியர் தகுதி தேர்வு தமிழகத்தில் இரண்டு

முறை நடந்தது. இந்த தேர்வுகளில் இதுவரை 9000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 அவர்களுக்கு நவம்பர் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடந்தது. முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களில் 449 பேரும், இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களில் 84 பேரும் சான்று
சரிபார்ப்பில் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நேற்று சான்று சரிபார்ப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று உரிய தகவல் கிடைக்கப்பெறாதவர்களும் இந்த சான்று சரிபார்ப்பில் கலந்து கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த வாரம் அறிவித்து இருந்தது. இதையடுத்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு நேற்று காலை 500க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வந்தனர்.

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரியை சந்தித்தனர். ‘கடந்த முறை வராமல் போனது உங்கள் தவறு. அதனால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது’ என்று சவுத்ரி தெரிவித்தார். இதையடுத்து பட்டதாரிகள் டிஆர்பி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். உடனடியாக போலீசார் வரவழைக்கப்பட்டனர். பின்னர் ஆசிரி யர் தேர்வு வாரிய அதிகாரி களும்வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பட்டதாரிகளிடம் இருந்த மனுக்களை வாங்கிக் கொ ண்டு அனுப்பி விட்டனர்.
 இந்த சம்பவம் குறித்து பட்டதாரிகள் கூறியதாவது:

சான்று சரிபார்ப்பின்போது எங்களின் சான்றுகளை சரிபார்த்தனர். அப்போது சிலருக்கு அவர்கள் படித்த பல்கலைக் கழகத்தில் இருந்து மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட சில சான்றுகள்  வரவில்லை. அது குறித்து தெரிவித்தபோது பிறகு கொண்டு வந்து கொடுங்கள் என்றனர். இப்போது சான்றுகள் வந்துள்ளது. அதை வாங்கவே மறுக்கின்றனர். மேலும் பி.எஸ்சி விலங்கியல் படித்து பயோலஜிக்கல் சயின்ஸில் பி.எட் முடித்துள்ளவர்களின் சான்றுகள், ஆசிரியர் பணிக்கு தகுதி இல்லை என்று கூறுகின்றனர். இதுபோல பலரின் சான்றுகள் செல்லாது என்று கூறுகின்றனர்.

அதேபோல இணையான படிப்புகள் இல்லை என்று சில படிப்புகளை கூறுகின்றனர். அதற்குரிய அரசாணைகளையும் அதிகாரிகள் காட்டுகின்றனர். இது போன்ற ஆணைகளை தகுதி தேர்வுக்கு முன்பே வெளியிட்டு இருந்தால் நாங்கள் தகுதி தேர்வு எழுதவே வந்திருக்கமாட்டோம். என்ன பாடத்திட்டம் என்பதையும் தெளிவாக கூற மறுக்கின்றனர். 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பொருளியல் பாடம் வைத்துள்ளனர். ஆனால் பொருளாதாரம் படித்தவர்கள் தகுதி இல்லை என்று கூறுகின்றனர். இப்படி தெளிவில்லாமல், குழப்பமாக ஆசிரியர் தேர்வு வாரியம் நடந்து கொள்கிறது. இவ்வாறு பட்டதாரிகள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...