நர்சரி பள்ளிகளில் தனியார் செக்யூரிட்டி நியமிக்க முடிவு


அதிகரித்து வரும் பாலியல் புகார்களை அடுத்து மாணவிகளின் பாதுகாப்புக்காக அரசு நர்சரி பள்ளிகளில் தனியார் காவலாளிகளை நியமிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.தெற்கு டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 548 ஆரம்ப பள்ளிகள்
உள்ளன. இந்த பள் ளிகளில் 6ம் வகுப்பு வரை பல ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஆரம்ப பள்ளிகளில் 5 முதல் 13 வயது வரையிலான குழந்தைகள் படிக்கின்றனர். நகரில் சிறு குழந்தைகள் கடத்தப்படுவதும், அவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதும் அதிகரித்து வருகிறது.தெற்கு டெல்லி மாநகராட்சி கமிஷனர் மனீஷ் குப்தா கூறியதாவது:பள்ளி மாணவிகள்  கடத்தப்பட்டு சில்மிஷம், பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்ற புகார்கள் அடுத்தடுத்து எங்கள் கவனத்துக்கு வந்தன.  இதனால் பள்ளி குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பது குறித்து மாநகராட்சி பல்வேறு தகவல்களை சேகரித்து ஆலோசித்து வந்தது. முதற்கட்டமாக அனைத்து ஆரம்ப பள்ளிகளிலும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் செக்யூரி ட்டி நிறுவனங்களில் இரு ந்து காவலாளிகளை நியமிப்பது என்று முடிவு செய்துள்ளோம். வருகிற கல்வி ஆண்டு முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படும்.படிப்படியாக நகரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தனியார் காவலர்கள்(செக்யூரிட்டிகள்) நியமிக்கப்படுவார்கள். இதற் காக ஆண்டுக்கு ரூ.1 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மாணவிகளின் பாது காப்புக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.இவ்வாறு மனீஷ் குப்தா கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...