கம்யூனிகேடிவ் இங்கிலீஷ் பட்டம் டிஆர்பியில் மறுக்கப்படுவதால் மீனாட்சி அரசுக் கல்லூரி மாணவிகள் போராட்டம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பி.ஏ. கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ் பட்டம், பி.ஏ. இங்கிலீஷ் பட்டப் படிப்புக்கு இணையானது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, அரசுப் பணி நியமனத்தின்போது பி.ஏ. இங்கிலீஷ் பட்டத்துக்கு இணையாக பி.இ. கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ் படிப்பும் கருதப்படும் என்று அறிவித்திருந்தது. ஆனால் இது தொடர்பாக டிஆர்பி பணி நியமனம் செய்ய மறுத்து விட்டதாக மதுரை மீனாட்சி அரசுக் கல்லூரி மாணவிகள் தெரிவித்தனர். இதனால் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் இன்று காலை கூடி அரசுக் கல்லூரி முதல்வரைச் சந்தித்து கல்லூரியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். ஆனால் கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி, இது குறித்து டிஆர்பிக்கு எழுதியிருப்பதாகக் கூறி மாணவியரை சமாதானப் படுத்தினார். ஆனால், அவர்கள் கல்லூரி முதல்வரே நேரில் வந்து டிஆர்பியிடம் பேசவேண்டும் என்று கோரினர். ஆனால், இது தொடர்பாக ஏற்கெனவே டிஆர்பி.,க்கு கடிதம் எழுதியிருப்பதால், விரைவில் இதுகுறித்து பேசுவோம், அதுவரை நீங்களே டிஆர்பியிடம் பேசுங்கள் என்று மாணவியரிடம் கூறியதால், அங்கே பதற்றம் எழுந்தது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...