அரசுப்பள்ளி மாணவர்களுக்காக கட்டப்பட்டு திறக்கப்படாத நவீன சமையல் கூடம்

புதுச்சேரியில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விரைவாக மதிய உணவு வழங்கும் நோக்கத்தில் லாஸ்பேட்டை பகுதியில் ரூ.1.70 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நவீன சமையல் கூடம் கட்டி முடித்து பல மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது.
÷புதுச்சேரியில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, ஒரு
குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் சமையல் கூடத்தில் மொத்தமாக உணவு தயாரிக்கப்பட்டு பின்னர் அந்த உணவு பிரித்து வாகனங்கள் மூலம் பல்வேறு பள்ளிகளுக்கு அனுப்பப்படும்.
÷புதுச்சேரி நகரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு குருசுகுப்பம், சண்முகாபுரம் போன்ற பகுதிகளில் உள்ள சமையல் கூடங்களில் உணவு தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது.  அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருப்பதால் மாணவர்களின் சேர்க்கையும் அதிகரித்துள்ளது.
÷இதனால் கூடுதல் மாணவர்களுக்கு சமையல் செய்வதற்கான தேவை ஏற்பட்டதாலும், அவர்களுக்கு விரைவாக சமைத்து சூடாக விநியோகிப்பதற்கு ஏதுவாகவும் கடந்த ஆட்சியில் லாஸ்பேட்டை பகுதியில் ஒரு நவீன சமையல் கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்டு கட்டப்பட்டது. அதற்கான பணிகள் முடிவுறும் சூழலில் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வந்ததால் அந்த சமையல் கூடம் திறக்கப்படவில்லை. இந்நிலையில் பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகிறது. ரூ.1 கோடியே 70 லட்சம் செலவில் கட்டப்பட்ட இந்த சமையல் கூடம் திறக்கப்படாமலே உள்ளது.
÷இது குறித்து கல்வித்துறை இயக்குநர் வல்லவனிடம் கேட்டபோது, லாஸ்பேட்டை நவீன சமையல் கூடத்தில் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து விட்டன. தற்போது உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக திறக்க முடியவில்லை. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதைப் பார்த்துக் கொண்டு திறப்பு விழா நடத்துவதா அல்லது அப்படியே திறப்பதா என்று முடிவு செய்ய உள்ளோம். விரைவில் அந்த சமையல் கூடம் திறக்கப்படும் என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...