உலகம் அழியும் அபாயம் உள்ளதா? கோவையில் கலாம் "பளிச்'

இந்த உலகம் அழிந்து விடும் என யாரும் பயம் கொள்ள தேவையில்லை. "சந்திராலிமிட்' என்ற கண்டு
பிடிப்பின் அடிப்படையில், சூரியன் இன்னும் 5 பில்லியன் ஆண்டுகள் இருக்கும்'' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.
துடியலூர் அருகேயுள்ள கொங்கு நாடு கலை,

அறிவியல் கல்லூரியில், இந்திய அறிவியல் கழகத்தின் கோவை மண்டல கருத்தரங்கு நடந்தது. நிகழ்ச்சியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவது:
கணித மேதை சீனிவாச ராமானுஜர், சர்.சி.வி. ராமன், சந்திரசேகர், தாமஸ் ஆல்வா எடிசன், கிரகாம்பெல் உள்ளிட்ட பல்வேறு விஞ்ஞானிகளின், கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் நமது அறிவியல் வளர்ந்துள்ளது.
இந்த ஆண்டில், நாம் ஒவ்வொருவரும் தனிச்சிறப்புடன் திகழ உறுதி ஏற்க வேண்டும். எந்த நிகழ்வைக் கண்டாலும் ஏன், எதற்கு என்ற கேள்வியை நமக்குள் எழுப்பி, அதற்கு விடை காண முயற்சிக்க வேண்டும். இந்த உலகம் அழிந்து விடும் என யாரும் பயம் கொள்ள தேவையில்லை. "சந்திராலிமிட்' என்ற கண்டுபிடிப்பின் அடிப்படையில், சூரியன் இன்னும் 5 பில்லியன் ஆண்டுகள் இருக்கும்.
ஒவ்வொருவரும், நமக்கென ஒரு நோக்கத்தை வளர்த்துக் கொண்டு, அதில் போராடி வெற்றி பெற்றே தீர வேண்டும். அதற்காக நாம் ஒவ்
வொருவரும், உயர்ந்த நோக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
புத்தகம், ஆசிரியர், மற்றவர்களின் உதவியோடு நமது அறிவை விரிவாக்கி கொள்ள வேண்டும். கடினமாக உழைக்க கற்றுக் கொள்ள வேண்டும். தியாக உணர்வோடு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். "ஹிக்ஸ்போசன்' கண்டுபிடிப்பு உலக அறிவியலில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல் என்று குறிப்பிடலாம். இன்றைய இளைஞர்கள், புதிய கண்டுபிடிப்புகளில் தங்களது கவனத்தை செலுத்த வேண்டும். மின் உற்பத்தியில் சோலார் மின் உற்பத்தி குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. குஜராத் மாநிலம், சரங்கா என்ற இடத்தில், சூரிய சக்தி பேனல்களை கொண்டு 190 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
நமது அறிவியல் கண்டு
பிடிப்புகள், நாம் வாழும் இந்த பூமியின் வளத்தை அதிகப்படுத்த வேண்டும். நமது சுற்றுச் சூழலை மேம்படுத்த வேண்டும். எந்த ஒரு பிரச்னையையும் என்னால் தீர்க்க முடியும் என்ற உறுதியான உள்ளத்தோடு, இன்றைய இளம் அறிவியல் அறிஞர்கள் நாட்டுக்காக பணியாற்ற முன் வரவேண்டும்.
இவ்வாறு, முன்னாள்
ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.
விழாவில், கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரி செயலாளர் ஆறுச்சாமி, இஸ்ரோ அமைப்பின் முன்னாள் விஞ்ஞானி சிவசுப்பிரமணியன், பாரதியார் பல்கலை துணைவேந்தர் ஜேம்ஸ்பிச்சை உள்ளிட்ட பலர் பங்கேற்
றனர்.
இந்திய அறிவியல் கழகத்தின் பொதுசெயலாளர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.
இன்று நடக்கும் இரண்டாம் நாள் கருத்தரங்கில்
"உயிரியலின் எதிர்காலம்' என்ற தலைப்பில் தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் ராமசாமி பேசுகிறார். கருத்தரங்குக்கான ஏற்பாடுகளை கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரி நிர்வாகம் செய்து வருகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...