பள்ளிக் கல்வித் துறை அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்

தமிழக பள்ளிக் கல்வித் துறை நடத்தும் விளையாட்டுப் போட்டிகளில் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு அனுமதி இல்லை என்ற அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த இடைக்கால தடையை உயர் நீதிமன்றம் நீக்கியது.
21.2.2012 அன்று தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை ஓர் அரசாணையை
வெளியிட்டது. சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கென தனியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அந்தப் போட்டிகளில் மாநில பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளின் மாணவர்களுக்கு வாய்ப்புகள் தரப்படுவதில்லை.
இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறையின் விளையாட்டுப் போட்டிகளில் சி.பி.எஸ்.இ., மாணவர்களை அனுமதித்தால் அந்த மாணவர்கள் இரண்டுவிதமான போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு பெறுவார்கள். அதன் மூலம் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகளில் சேருவதற்கான தகுதியை அடைய கூடுதல் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கும். இதன் காரணமாக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பயிலும் மாணவர்கள் சம வாய்ப்பு கிடைக்காமல் பாதிக்கப்படுவார்கள்.
ஆகவே, சி.பி.எஸ்.இ. நடத்தும் விளையாட்டுப் போட்டிகளில் மாநில பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளின் மாணவர்களை அனுமதிக்காத நிலையில் மாநில பள்ளிக் கல்வித் துறை நடத்தும் போட்டிகளில் சி.பி.எஸ்.இ. மாணவர்களை அனுமதிக்கத் தேவையில்லை என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சி.பி.எஸ்.இ. மாணவர்கள் சிலர் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், பள்ளிக் கல்வித் துறையின் அரசாணைக்கு கடந்த அக்டோபர் 15-ம் தேதி இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த இடைக்காலத் தடையை நீக்கக் கோரி பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு கூடுதல் வழக்குரைஞர் பி. சஞ்சய் காந்தி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது நீதிபதி டி. ஹரி பரந்தாமன் விசாரணை நடத்தினார். அப்போது பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் பி.எச். அரவிந்த் பாண்டியன், பள்ளிக் கல்வித் துறை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான சம வாய்ப்பை பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த அரசாணை கொண்டு வரப்பட்டது என்று வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து அரசாணைக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டார். ஜிம்னாஸ்டிக் போன்ற விளையாட்டுகள் சி.பி.எஸ்.இ. நடத்தும் போட்டிகளில் இல்லை என்றும், ஆகவே, மாநில பள்ளிக் கல்வித் துறை நடத்தும் ஜிம்னாஸ்டிக் விளையாட்டுப் போட்டிகளில் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்றும் மனுதாரர்கள் தரப்பில் கோரியுள்ளனர்.
மனுதாரர்கள் சி.பி.எஸ்.இ. பள்ளியில் படிப்பதால், ஜிம்னாஸ்டிக் விளையாட்டையும் போட்டிகளில் சேர்க்குமாறு சி.பி.எஸ்.இ. நிர்வாகத்திடம்தான் அவர்கள் கோரிக்கை வைக்க வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...