''மேப் யுவர் ட்ரெயின் லைவ்'' ரயில் செல்லும் இடத்தை கூகுள் இணையதளத்தில் பார்க்கலாம்


இந்திய ரயில்கள் இயக்கத்தை வரைபட வடிவில் ஆன்லைனில் கண்டறியும் வசதி ரயில்வே துறையால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரயில்வேயில் தேசிய அளவில் ரயில் மற்றும் நிலையங்கள் தொடர்பான விவரங்களை ஆன்லைனில் தெரிந்து கொள்ளும் புதிய வசதி கடந்த 6
மாதங்களுக்கு முன்னர் நடைமுறைப் படுத்தப்பட்டது.

இதில் லைவ் ஆக ஒரு ரயில் எந்த ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருக்கிறது, எவ்வளவு நேரம் தாமதமாக இயக்கப்படுகிறது, அடுத்த நிறுத்தம் என்ன, எந்தெந்த நிறுத்தங்களில் நின்று செல்லும் என்பது உள்ளிட்ட விவரங்கள் ஆன்லைன் வடிவில் இடம் பெற்றுள்ளன. இதற்கு ரயில்வேயின்tp://www.trainenquiry.com என்ற இணையதள முகவரியில் வசதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது இதனுடன் ரயில்களின் இயக்கங்களை ஆன்லைனில் இந்திய வரைபடத்தில் கூகுள் வரைபடம் உதவியுடன் தெரிந்து கொள்ள முடியும். ரயில் புறப்படும் இடம் முதல் சென்று சேரும் இடம் வரை ரயில் பாதை, நிறுத்தங்கள், ரயில் சென்று கொண்டிருக்கும் இடம் அம்புக்குறியுடன் காண்பிக்கப்பட்டுள்ளது. ‘ரயில் ஸ்டேஷன் லைவ் ஆன் தி மேப்'' (Train/Station Live on the Map)என்ற பெயரில் கூகுள் வரைபடத்தில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. ரயில் செல்லும் பாதை மஞ்சள் கோடாக காட்டப்படுகிறது.

ஓடிக்கொண்டிருக்கின்ற ரயில் அம்புக்குறியை கிளிக் செய்தால் அந்த ரயில் எந்த மாநிலத்தின் எந்த ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது என்ற விவரம் தெரியவரும். புறப்படுகின்ற, வந்து சேருகின்ற நிலையங்கள் பச்சை பெட்டி வடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த ரயில் நிலையம் சென்று சேரும் என்ற விவரமும் வரைபடத்திலேயே பார்க்க முடியும்.

ரயில் லைவ் ஆக சென்று கொண்டிருக்கும் இரு நிலையங்களுக்கு இடையேயான பகுதிகளையும் கண்டறிய முடியும். மேலும் ஒரே நேரத்தில் எத்தனை ரயில்கள் இயங்குகின்ற என்பதையும் கண்டறிய இயலும். நேற்று மாலை 5.45 மணி நிலவரப்படி இந்தியாவில் 1941 ரயில்கள் ஓடிக்கொண்டிருந்தன. இதில் அப்போது 51 சதவீத ரயில்கள் சரியான நேரத்திற்கு ஓடிக்கொண்டிருந்தன என்ற கூடுதல் விவரமும் இந்த வரைபடத்தின் வழியாக தெரிவிக்கப்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...