நாசா போட்டியில் கோவை மாணவருக்கு ஒன்பதாம் இடம்

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா நடத்திய, குளோபல் இன்ஜினியர்ஸ் போட்டி-2012ல் கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி மாணவர் ஒன்பதாம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.
உலகளவில், இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கான, குளோபல்
இன்ஜினியர்ஸ் போட்டி-2012, நாசாவால் நடத்தப்பட்டது. 200 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். போட்டியில் இந்திய இன்ஜினியரிங்
கல்லூரி மாணவர்கள் முதல் 20 இடங்களுக்குள் வந்தனர்.
கோவை கற்பகம் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஹரீஸ்சந்தர் ஒன்பதாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கம்ப்யூட்டர் தொடர்பான சாட்டிலைட் தகவல் தொடர்பில் இந்த சாதனையை படைத்துள்ளார். புராசஸர் திறன், ஸ்மார்ட் மேலாண்மையில் தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
தொழில்நுட்பத்தின் மூலம் சாட்டிலைட்களில் குறைந்த திறனை பயன்படுத்த முடியும் என்பதையும், விண்வெளி மாசுபாட்டை குறைக்கும் வழிமுறைகளையும் கண்டறிந்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...