பி.ஏ ஆங்கில தொடர்பியல் படிப்பு அரசாணை வெளியிட்டும் டிஆர்பி ஏற்க மறுப்பதா?


அரசாணை வெளியிட்ட பின்னரும் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) பி.ஏ ஆங்கில தொடர்பியல் படிப்பை ஏற்காததால் மதுரை மீனாட்சி அரசினர் கல்லூரியை நேற்று மாணவிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மதுரை மீனாட்சி அரசினர் கல்லூரியில் யுஜிசி வழிகாட்டுதலில் வேலைவாய்ப்புகளை
ஏற்படுத்தும் வகையில் பி.ஏ ஆங்கிலம் பாடம் 1997ம் ஆண்டு பி.ஏ ஆங்கிலம் தொடர்பியல் (கம்யூனிகேடிவ் இங்கிலீஷ்) என மாற்றப்பட்டது. இப்பிரிவில் நூற்றுக்கணக்கான மாணவிகள் படித்து பட்டம் பெற்றுள்ளனர். இவர்களில் சிலருக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடம் கிடைத்துள்ளது. மேலும், சிலர் டிஆர்பி நிர்ணயித்துள்ள கட்,ஆப் மதிப்பெண்ணான 90 மதிப்பெண்களை விட அதிகமாக 107 மதிப்பெண் வரை பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.

சான்றிதழ் சரிபார்ப்பின் போது பி.ஏ ஆங்கில தொடர்பியல் சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) ஏற்க மறுத்தது. மதுரை காமராஜ் பல்கலைக்கழக பதிவாளர் இப்படிப்பு பி.ஏ ஆங்கிலத்திற்கு இணையானது என அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியும் டிஆர்பி ஏற்கவில்லை. பிஏ., ஆங்கில தொடர்பியல் பி.ஏ ஆங்கிலத்திற்கு இணையான படிப்பு என்பதற்கான அரசாணை இருந்தால் மட்டும் ஏற்க முடியும் என கூறியது. இதனை எதிர்த்து மாணவிகள் தொடர்ந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு பி.ஏ ஆங்கில தொடர்பியல் படிப்பை பி.ஏ ஆங்கிலத்திற்கு இணையான படிப்பு என அரசாணை எண் 333 நவ. 27ல் வெளியிட்டது. ஆனால் இந்த அரசாணையையும் டிஆர்பி ஏற்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் நேற்று காலை 9 மணியில் இருந்து மதியம் 3 மணி வரை மீனாட்சி கலை கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் விஜயராணி, மீனாட்சி கல்லூரி முதல்வருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் மாணவிகள் ஒவ்வொருவரும் தங்கள் பிரச்னைக்கு தீர்வு காணும்படி கல்லூரி முதல்வர்(பொ) சேதுராக்காயிடம் கடிதம் வழங்கி கலைந்து சென்றனர்.

கல்லூரி கல்வி இணை இயக்குநர் விஜயராணி கூறுகையில், ‘இது குறித்து கல்லூரி கல்வி இணை இயக்குனகரத்திற்கும், அரசு செயலர் அலுவலகத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாணை பெற்ற தேதிக்கு பின்னர் டிஆர்பியில் தேர்வானவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் எனக்கூறி டிஆர்பி மறுக்கிறது’ என்றார். காரைக்குடி: அழகப்பா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் பி.ஏ ஆங்கிலம் (தொழிற்சார் கல்வி) பட்டப்படிப்பு பயின்ற மாணவ, மாணவிகளும் இதே பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைவு கல்லூரிகளில் 2002ல் பி.ஏ ஆங்கிலம் (தொழிற்சார் கல்வி) பட்டப் படிப்பு துவங்கப்பட்டது. இதில் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் இதே நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களும் ஆசிரியர் பணிநியமனம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...