பள்ளிகளில் "தர மதிப்பீடு முறை' குழப்பம்

மாணவர்கள் தவிப்பு!தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள "தர மதிப்பீடு முறை'யில் (கிரேடு சிஸ்டம்) நிலவும் குழப்பத்தால், தங்கள் திறனை மேம்படுத்த முடியாமல் மாணவர்கள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாணவர்களின் கல்வித் தரத்தை அறிய முடியாமல் பெற்றோரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.

"தர முறை' திட்டம்: பல்வேறு தடைகளுக்கு இடையே 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இக்கல்வி முறைக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அதேசமயம், பள்ளிகளில் தற்போது 8-ம் வகுப்பு வரை அறிமுகம் செய்யப்பட்டுள்ள "தர மதிப்பீடு முறை' திட்டத்தில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே, சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் இந்த மதிப்பீடு முறை, நடைமுறையில் இருக்கிறது. இதை அடிப்படையாக வைத்து, தமிழக கல்வித் துறையின்கீழ் உள்ள பள்ளிகளில் தேர்வு முறையிலும் தரமதிப்பீடு முறை அறிமுகம் செய்யப்பட்டது.

இது மாணவர்களின் சிந்தனை ஆற்றல் வளர்வதற்கு சிறிதும் பயனில்லாத திட்டம் என்று பெரும்பாலான ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மாணவரின் மதிப்பீட்டு அட்டையில் குழப்பம்: தற்போது, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியரின் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு மதிப்பீட்டு அட்டையில், கற்றல் வெளிப்பாடுகள் என பாடங்களுக்கு மதிப்பெண்களுக்கு பதிலாக "ஏ' முதல் "இ' வரையிலான குறியீடுகளாக குறிப்பிடப்படுகின்றன.

இதில், முதல் பக்கத்தில் வாழ்க்கைத் திறன்கள், மனப்பான்மைகளும்-மதிப்புகளும், நன்னலம் என்ற தலைப்பில் யோகா, முழு உடற்பயிற்சி, பாட இணைச் செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு பருவம் 1 முதல் 3 வரை தனித்தனி தர மதிப்பீடு குறியீடுகள் பதிவு செய்யப்படுகின்றன. அட்டையின் பின் பக்கத்தில் கல்விசார் பகுதிகள் என பாடங்களில் மாணவ, மாணவியர் எடுத்துள்ள மதிப்பெண்களுக்கு தரமதிப்பீடு குறியீடுகள் பதிவு செய்யப்படுகின்றன. இதில், குறியீடுகளுக்கான மதிப்பெண் குறித்த விவரம் குறிப்பில் சுட்டிக்காட்டப் படவில்லை. இதனால், மாணவர்களின் மதிப்பெண்கள் விவரத்தை பெற்றோர் அறிவதில் குழப்பம் ஏற்படுகிறது. மாணவர்களுக்கே கூட, தங்களின் மதிப்பெண் விவரம் குறிப்பாகத் தெரிய வாய்ப்பில்லாத நிலை இருக்கிறது.

மேலும், மாணவர்களுக்குள் பாடங்களை கற்பதில் போட்டி மனப்பான்மை குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பிட்ட 10 மதிப்பெண்களுக்குள் எந்த மதிப்பெண் பெற்றாலும், ஒரே தரக்குறியீடு கொடுக்கப்படுவதால், மாணவர்களுக்குள் கற்றலில் போட்டி மனப்பான்மை குறைவது மேம்பாட்டுக்கு உகந்ததில்லை என, மூத்த ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.

மேற்படிப்புகளுக்கு சிக்கல்: பள்ளிக் கல்வித் துறையில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில், பிளஸ் 1 வகுப்பில் பிரிவுகள் ஒதுக்கப்படுகின்றன. அதேபோன்று, பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதிலும், கலந்தாய்வுகளில் 1 மதிப்பெண் குறைந்தால் கூட விருப்பப்பட்ட பிரிவுகள் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்புள்ளது.

இந்நிலையில், பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மதிப்பெண்களுக்கு பதில், அதாவது 10 மதிப்பெண்களுக்கு ஒரு தர குறியீடு அடிப்படையில் தேர்வுகளை சந்திக்கும் பெரும்பாலான மாணவர்களுக்கு, 10-ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு செல்லும் போது, போதிய உந்துதல் இல்லாமல் போவதற்கு வாய்ப்புள்ளது. இதன் மூலம் பெரும்பாதிப்பை சந்திக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படும் நிலை உள்ளதாகக் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

"உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'

இந்த தர மதிப்பீடு முறையில், பருவம் 1-ல் படித்த பாடங்களை பருவம் 2-ல் படிக்க வேண்டியதில்லை. இந்த 2 பருவங்களிலும் படித்த பாடங்களை 3-ம் பருவத்தில் படிக்க வேண்டியதில்லை என்ற முறையில் பாடத்திட்டம் வகுக்கப்பட்டிருப்பது மட்டுமே ஓரளவு மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அந்த அதிகாரி மேலும் கூறுகையில்,"மாணவர்களை கல்லூரி பாடத்திட்டங்களுக்கு இணையான முறையில், பருவமுறையில் பாடத்திட்டங்கள் வகுப்பதில் தவறில்லை.

தேர்வுகளில் புகுத்தப்பட்டுள்ள கற்றல் வெளிப்பாடு முறையில் பின்பற்றப்படும் தர மதிப்பீடு முறை மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த உதவாத நிலை இருக்கிறது. அதேசமயம், பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இணையான பயிற்சி மற்றும் ஆசிரியர்களின் ஈடுபாடு இருக்கும் பட்சத்தில் இந்த தர மதிப்பீடு முறை பயனுள்ளதாக அமையலாம். இதற்குத் தேவையான நடவடிக்கையை மேற்கொண்ட பின்னரே, தர மதிப்பீடு முறைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சிறந்தது.

தர குறியீட்டுக்கான மதிப்பெண் விவரத்தை, மாணவரின் மதிப்பீட்டு அட்டையில் (ரேங்க் கார்டு) குறிப்பாகத் தெரிவிக்க வேண்டியதும் அவசியம். அடுத்தாண்டு முதல் 9-ம் வகுப்பு வரை, இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு முன், தர மதிப்பீடு முறையில் உள்ள குழப்பங்களுக்குத் தீர்வுகாண பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...