பள்ளி மாணவர்களுக்காக நடமாடும் ஆலோசனை மையம்


தமிழகத்தில், பள்ளி மாணவர்களின் உளவியல் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், மூன்று கோடி ரூபாய் செலவில், நடமாடும் ஆலோசனை மையம், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில்
ஏற்படுத்தப்பட உள்ளது.
பள்ளி மாணவர்கள் சுற்றுப்புற சூழல், குடும்ப நிலை, இளம் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள், மனசோர்வு, மனக்குழப்பம், பாலியல் வன் கொடுமைகள், மதிப்பெண் போன்ற பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படுகின்றனர். இதன் விளைவால் கொலை, தற்கொலை உள்ளிட்ட முரண்பாடான முடிவுகளை எடுப்பதுடன், உடல் மற்றும் மன ரீதியாகவும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையை மாற்றி, மாணவர்களுக்கு மகிழ்ச்சியான சூழலை உருவாக்க, பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் வகையில், உளவியல் ஆலோசகர், உதவியாளர் மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய, 10 நடமாடும் ஆலோசனை மையங்கள், மூன்று கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 மாணவர்களை மையப்படுத்தி, அவர்களின் உள்ளார்ந்த உணர்வுகள் தொடர்ந்து பரிசோதிக்கப்படும். மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் தொழில் மற்றும் வாழ்கை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும். இத்திட்டம் விரைவில் துவங்கப்படவுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...