10ம் வகுப்பு அரையாண்டு தேர்வில் சமூக அறிவியல் வினாத்தாளை போல மற்ற கேள்வித்தாளும் வெளியானதா?


பத்தாம் வகுப்பு தேர்வு வினாத்தாள் வெளியானதைப் போல மற்ற பாடங்களுக்கான வினாத்தாளும் வெளியாகி இருக்கலாம் என ஆசிரியர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். 10ம் வகுப்பிற்கான அரையாண்டு தேர்வு இந்த ஆண்டு முதல் மாநிலம் முழுவதும்
பொதுத்தேர்வாக நடத்தப்படுகிறது. சிவகாசியில் உள்ள அச்சகங்களில் சில மாவட்டங்களுக்கான கேள்வித்தாள்கள் அச்சிடப்பட்டன. விருதுநகர் மாவட்டத்திற்கான கேள்வித்தாள் பாளையங்கோட்டையில் அச்சிடப்பட்டது.

இந்நிலையில் சிவகாசி அச்சகத்தில் அச்சிடப்பட்ட கேள்வித்தாள்கள் வெளியாகி, மாணவர்கள் மத்தியில் விலைக்கு விற்கப்பட்டுள்ளன. இதையடுத்து சமூக அறிவியலுக்கான தேர்வை ரத்து செய்து வரும் 10ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கேள்வித்தாள் வெளியான விவகாரம் குறித்து கள்ளர் சீரமைப்பு பள்ளி இணை இயக்குனர் செல்லம் சிவகாசியில் நடத்திய ஆய்வில் Ôவிருதுநகர் மாவட்டத்துக்கு அச்சிடப்பட்ட கேள்வித்தாள் வெளியாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் சிவகாசியில் உள்ள சில அச்சகங்களிலும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

கல்வித்துறை மூலம் வழங்கப்படும் சிடிகள் அச்சகங்களுக்கு வழங்கப்படும் போது, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு குறியீட்டு எண் வழங்கப்படும். அதன்படி விருதுநகர் மாவட்டத்துக்கு +,+,+, என குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள கேள்வித்தாளில் நீநீநீ என குறிப்பிடப்பட்டு இருந்தது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பகவதி கூறுகையில், ‘மாவட்டத்தில் உள்ள 16 வினாத்தாள் மையங்களை ஆய்வு செய்ததில் விருதுநகர் மாவட்டத்திற்கு அச்சிடப்பட்ட சமூக அறிவியல் வினாத்தாள் வெளியாகவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

எந்த மாவட்டத்திற்கான வினாத்தாள் என்பதை சென்னை கல்வித்துறை அதிகாரிகள்தான் முடிவு செய்ய வேண்டும். தற்போது அனைத்து மாவட்டங்களில் உள்ள கேள்வித்தாள்களையும் சென்னைக்கு அனுப்பி வைக்கும்படி கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அதை வைத்து வெளியான கேள்வித்தாள் எந்த மாவட்டத்துக்கு சொந்தமானது என கண்டுபிடித்து விட முடியும்Õ என்றார்.

தற்போது நடந்து முடிந் த தேர்வுகளின் வினாத்தாள்களை திருத்திய ஆசிரியர்களின் மத்தியில் பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. நன்றாக படிக்கும் மாணவர்களை விட, படிக்காத மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற்றுள்ளனர். இதனால் மற்ற தேர்வுகளின் வினாத்தாள்களும் வெளியாகி இருக்கலாம் என்ற சந்தேகம் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. என வே கடந்த காலங்களை போல் அந்தந்த மாவட்டங்களிலேயே கேள்வித்தாள் தயாரித்தால், இதுபோன்ற நிலை ஏற்படும்போது அந்த மாவட்டங்களில் மட்டும் தேர்வு நடத்தினால் போதும் என ஆசிரியர்கள் கூறினர்.

சிவகாசி போலீசில் சிஇஓ புகார்

வினாத்தாள் வெளியான விவகாரம் குறித்து மதுரை கள்ளர் பள்ளி இணை இயக¢குனர் செல்லம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பகவதி ஆகியோர் நேற¢று முன்தினம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 16 மையங்களிலும் நேரில் விசாரணை நடத்தினர். இதில் வெளிமாவட்ட வினாத்தாள் விருதுநகரில் வெளியாகிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பகவதி நேற்று சிவகாசி டவுன் போலீசாரிடம் புகார் அளித்தார்.

மனுவில், 10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுக¢கான சமூக அறிவியல் பாட வினாத்தாள் வெளியாகியுள்ளது. இந்த வினாத்தாள் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தது இல்லை. வெளியான வினாத்தாள் எங்கு அச்ச¤டப்பட்டது. இதை வெளியிட்டவர்கள் யார் என்பதை போலீசார் விசாரித்து கண்டுபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...