பொங்கல் பரிசாக, அரசால் வழங்கப்பட்ட, 100 ரூபாயை, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குக் கொடுக்கக் கோரி, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, கோவை மக்கள், திருப்பி அனுப்பினர்.

பொங்கல் பரிசாக, அரசால் வழங்கப்பட்ட, 100 ரூபாயை, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குக் கொடுக்கக் கோரி, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, கோவை மக்கள், திருப்பி அனுப்பினர். இந்த மக்களின்
பெருந்தன்மையான குணம், தமிழகத்தை தலை நிமிர வைத்துள்ளது.

தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால், விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில், 11.20 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட, சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது; 11 விவசாயிகள், தற்கொலை முடிவை தேடிக் கொண்டனர்.இதையடுத்து, "விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரணம் மற்றும் பயிர் காப்பீடு மூலம், ஏக்கருக்கு, 13,692 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்' என, முதல்வர் ஜெ., அறிவித்தார்.எனினும், பாதிப்பு அதிகம் என்பதால், ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய்; விவசாய கூலிகளுக்கு, 10 ஆயிரம் ரூபாய்; தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா, 10 லட்சம் ரூபாய் வழங்க கோரி, டெல்டா மாவட்டங்களில், தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.தமிழக அரசு சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி வாங்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு, தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை மற்றும் 100 ரூபாய் ரொக்கம் வழங்கப்படுகிறது. கோவை மாவட்டம், பிள்ளையார்புரத்தில் வசிக்கும், 600 குடும்பத்தார், அரசால் வழங்கப்பட்ட, 100 ரூபாயை பெற்று, அதைஅரசுக்கு திருப்பி அனுப்ப முடிவுசெய்தனர்.

"தற்கொலையை தடுத்து நிறுத்துக':
அதன்படி, சீனிவாசா நகரில் உள்ள தபால் அலுவலகத்தில், நேற்று இத்தொகையை, "மணியார்டர்' செய்தனர். அதில், "டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு, உரிய நிவாரணம் வழங்குக; தற்கொலையை தடுத்து நிறுத்துக' என்ற வாசகத்தையும் எழுதி அனுப்பினர்.நூறு ரூபாயை திருப்பி அனுப்பிய அனைவரும், வசதி படைத்தவர்கள் அல்ல; அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் தினக் கூலிகள் தான். நஷ்டத்தில் உள்ள விவசாயிகளின் நிலையை எண்ணிப் பார்த்து, தாங்கள் பெற்ற பணத்தை, அவர்களுக்காக அனுப்பி வைத்து, பிறருக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.
"சோறு போடுபவர்கள் சோகமாகலாமா?
'அருண்குமார் கூறியதாவது: பொங்கல் பண்டிகைக்காக,பொருட்களை அரசு வழங்குவது, மகிழ்ச்சியான விஷயம் தான். ஆனால், நமக்கு சோறு போட பாடுபடும் விவசாயிகள், விவசாயம் பாதிக்கப்பட்டு, சோகத்தில் உள்ளனர். அவர்களுக்கு செய்யும் சிறு உதவியாக, இத்தொகையை திருப்பி அனுப்பியுள்ளோம். மாநிலம் முழுவதும் உள்ளவர்கள், விவசாயிகளின் நலனுக்காக, பொங்கல் பரிசு தொகையை, முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பொங்கல் பண்டிகையைக் கொண்டாட, மூல காரணமாக விளங்கும் விவசாயிகளின் நலனுக்காக, கோவை மக்கள் செய்துள்ள நற்பணி, அனைவரையும், "சபாஷ்' போட வைக்கிறது!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...