1,015 குழந்தைகளுக்கு 40 நிமிடத்தில் மொட்டை : உலக சாதனை முயற்சிக்காக காந்தியடிகள் வேடம்


உலக சாதனைக்காக, காந்தி உலக மையம் சார்பில், இன்று சென்னை மெரீனா கடற்கரையில், 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகள், காந்தி வேடம் அணிந்து ஊர்வலமாக செல்ல உள்ளனர்.அதற்காக நேற்று, 40 நிமிடத்தில், 1,015
குழந்தைகளுக்கு மொட்டை அடித்து புதிய சாதனை ஏற்படுத்தப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், காந்தி உலக மையம் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. மகாத்மா காந்தியின் நினைவு பொருட்கள் மூலமாக, அவரது உயரிய கருத்துகளை மாணவர்களிடமும், இன்றைய சமுதாயத்தினரிடமும் கொண்டு செல்வதே, அந்த அமைப்பினரின் நோக்கம்.காந்தியின், 65வது நினைவு நாளான இன்று, உலக சாதனைக்காக, 1,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, மொட்டை அடித்து காந்தி வேடமிட்டு, சென்னை மெரீனா கடற்கரையில், ஊர்வலமாக செல்ல உள்ளனர்.

அதற்காக மொட்டை அடிக்கும் நிகழ்வு, கும்மிடிப்பூண்டி அடுத்த, புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் நேற்று நடந்தது. ஆர்வத்துடன் பங்கேற்ற, 1,015 மாணவ, மாணவியருக்கு, 138 பேர்களை கொண்டு, 40 நிமிடத்தில் மொட்டை அடிக்கப்பட்டது.இதன் மூலம், புதிய உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்தியா மற்றும் தமிழக சாதனைக்கான சான்றிதழ்களை, அமைப்பின் நிறுவனர் ராஜேஷிடம் வழங்கப்பட்டது.இந்நிலையில் நிகழ்வின் பதிவு, கின்னஸ் உலக சாதனைக்காக அனுப்பப்பட்டது. போலீசார், தீயணைப்பு துறையினர், 108 ஆம்புலன்ஸ், மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...