தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் 14 ஆண்டுகள் தளர்த்தி அரசு உத்தரவு


தமிழ் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பட்டியலை 1998ம் ஆண்டுக்கு முன்பாக அறிவித்து உத்தரவிட்ட நிலையில், 14 ஆண்டுகள் தளர்த்தி 2012 வரை தயாரிக்க அரசு புதிய உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு,
நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், சிறுபான்மை பாட மொழி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு 1.1.2013 அடிப்படையில் தகுதி வாய்ந்தோர் பட்டியலை தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ் ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு 31.12.1998 வரையும், இதர பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு 31.12.2012 வரையும் விவரங்களை அனுப்பி வைக்க அரசு ஏற்கெனவே உத்தரவிட்டது.

பிற பாடங்களுக¢கான பதவி உயர்வு பட்டியல் மட்டும் 2012 வரை அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ் ஆசிரியர்களுக்கு மட்டும் 1998 வரை என்பதால் பிஏ (தமிழ்), பிலிட் பட்டம் பெற்று தமிழ் ஆசிரியர் பதவி உயர்வுக்கு தயாராக இருந்த இடைநிலை ஆசிரியர்கள் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் தமிழ் ஆசிரியர் பதவி உயர்வுக்கும் பிற ஆசிரியர்களை போல் 31.12.2012 வரை முன¢னுரிமை பட்டியல் தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் இமெயில் அனுப்பியுள்ளார். இதனால் பதவி உயர்வை எதிர்பார்த்து காத்திருந்த தமிழ் ஆசிரியர்கள் மக¤ழ்ச்சி அடைந்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...