பி.எச்டி. முடித்தவர்கள் பட்டம் பெற பிப்.18-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 155-வது பட்டமளிப்பு விழா மற்றும் 2011 ஆம் ஆண்டு துணை பட்டமளிப்பு விழா வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது.பி.எச்டி. பட்ட ஆய்வை முடித்து, இதுதொடர்பாக தேர்வுக் கட்டுப்பாட்டாளரிடம் இருந்து கடிதம் பெற்றவர்கள் இந்த விழாவில்
பங்கேற்க பிப்ரவரி 18-க்குள் விண்ணப்பிக்கலாம்.
பட்டமளிப்பு விழாவில் விருதுகள், பரிசுகள் பெற்ற இளநிலை, முதுநிலைப் பட்ட மாணவர்களும் மற்றும் பி.எச்டி., முடித்த ஆய்வு மாணவர்களும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.இதுதொடர்பான விண்ணப்பத்தை பல்கலைக்கழகத்தில் உள்ள விண்ணப்ப விநியோக மையத்திலோ, கடிதம் மூலமாகவோ ரூ.25 செலுத்திப் பெறலாம். சென்னைப்  பல்கலைக்கழக www.unom.ac.in இணையதளத்திலிருந்தோ பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...