குரூப் 1 தேர்வு பெயர் மாறுகிறது

 டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வின் பெயர், மாநில குடிமைப் பணித்தேர்வு என மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் பேசிய டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு
அட்டவணையை வெளியிட்டார். 27 துறைகளில் உள்ள 35 பதவிகளில் உள்ள 10 ஆயிரத்து 105 காலி பணி யிடங்களுக்கு தேர்வு நடத்தப்படவுள்ளன. மேலும், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு பெயர், மாநில குடிமைப் பணித்தேர்வு என மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதே போல், இதுவரை குரூப் 2 பிரிவில் இருந்த தலைமை கல்வி அதிகாரி, சப் ரெஜிஸ்ட்ரர், முனிசிபல் கமிஷனர், ஜூனியர் எம்ப்ளாய்மென்ட் ஆபிசர் மற்றும் அசிஸ்டென்ட் கமர்சியல் டாக்ஸ் ஆபிசர் பணியிடங்கள் தற்போது குரூப் 1 பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...