பிளஸ் 2 செய்முறைத் தேர்வு நாளை ஆரம்பம் : 4 லட்சம் பேர் பங்கேற்பு


தமிழகம் முழுவதும், பிளஸ் 2 செய்முறைத் தேர்வு, நாளை துவங்குகிறது. 4 லட்சம் மாணவ, மாணவியர், செய்முறைத் தேர்வில் பங்கேற்கின்றனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 1ல் துவங்கி, 27 வரை நடக்கிறது. 8 லட்சம்
மாணவ, மாணவியர், இத்தேர்வை எழுதுகின்றனர். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில், செய்முறைத் தேர்வு, நாளை துவங்குகிறது. மாவட்ட வாரியாக, மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பல கட்டங்களாக, செய்முறைத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என, தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது. முதல்கட்ட பட்டியலில் உள்ள பள்ளிகளில், நாளை துவங்கி, ஒரு வாரம் வரை, செய்முறைத் தேர்வு நடக்கிறது. ஒட்டுமொத்தமாக, 4 லட்சம் மாணவ, மாணவியர், இத்தேர்வில் பங்கேற்கின்றனர். 150 மதிப்பெண்களுக்கு, எழுத்துத் தேர்வு நடக்கிறது. இதில், 50 மதிப்பெண்களுக்கு மட்டும், செய்முறைத் தேர்வு நடக்கும். இந்த தேர்வுப் பணிகளில், முதுகலை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...