பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் 24 முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வர்களாக எழுத விரும்புவோர் வியாழக்கிழமை (ஜனவரி 24) முதல் ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தின்

மூலமாக தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 2-ஆம் தேதி வரை அவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நேரடித் தனித்தேர்வர்கள், ஏற்கெனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் ஆகியோர் தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம்.
தோல்வியுற்ற பாடங்கள் மட்டும் புதிய பாடத்திட்டத்தில்.....பத்தாம் வகுப்பு பழைய பாடத்திட்டத்தில் அறிவியல் பாடத்தை தவிர ஏனைய பாடங்களில் தோல்வியுற்றிருப்பின், தோல்வியுற்ற பாடங்களை மட்டும் புதிய பாடத்திட்டத்தில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். பழைய பாடத்திட்டத்தில் அறிவியல் பாடத்தில் தோல்வியுற்ற தேர்வர்கள் அறிவியல்பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்து, பயிற்சிகள் பெற்றிருந்தால் அறிவியல் பாடத்தேர்வினை புதிய பாடத்திட்டத்தில் எழுதலாம்.
அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்யாத தேர்வர்கள், 2013 ஜுன் 1 முதல் 30-ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களில் அறிவியல் பாட செய்முறை பயிற்சியில் பெயர்களை பதிவு செய்து பயிற்சி பெற்றதும் மார்ச் 2014-ல் தேர்வு எழுதலாம். அவர்களுக்கு இந்த ஆண்டு தேர்வு எழுத தகுதியில்லை.
ஓ.எஸ்.எல்.சி பழைய பாடத்திட்டத்தில் அறிவியல் பாடத்தை தவிர ஏனைய பாடங்களில் தோல்வியுற்றிருப்பின், தோல்வியுற்ற பாடங்களை மட்டும் புதிய பாடத்திட்டத்தில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் ஆகிய பழைய பாடத்திட்டத்தில் ஓரிரு பாடங்களில் தேர்ச்சிபெறவில்லை என்றாலும் எஸ்.எஸ்.எல்.சி. புதிய பாடத்தில் அனைத்துப் பாடங்களையும் எழுத வேண்டும். தேர்வரின் கைவசம் உள்ள மெட்ரிக், ஆங்கிலோ-இந்தியன் அசல் மதிப்பெண் சான்றிதழை அரசு தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்துவிட்டு புதிய பாடத்திட்டத்தில் தேர்வெழுத வேண்டும்.
தேர்வுக் கட்டணம்: தேர்வுக் கட்டணம் ரூ.125 ஆகும். கோர் பாங்கிங் வசதியுடைய பாரத ஸ்டேட் வங்கியில் கட்டணத்தைச் செலுத்துதல் வேண்டும். வங்கியில் தேர்வுக் கட்டணத்தை பிப்ரவரி 4-ஆம் தேதிக்குள் கட்ட வேண்டும். இதற்கான சலானை விண்ணப்பத்துடன் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தல்: ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தவுடன், அந்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து தேர்வரின் புகைப்படத்தை ஒட்ட வேண்டும். அதில் அவர் இறுதியாகப் பயின்ற பள்ளியின் தலைமையாசிரியரிடமோ, அருகில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியரிடமோ சான்றொப்பம் பெற வேண்டும்.
தேர்வுக் கட்டணம் செலுத்திய சீட்டு உள்ளிட்ட இணைப்புகளுடன் பிப்ரவரி 4-ஆம் தேதி மாலை 5.45-க்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...