புதிய கல்லூரிகளை துவக்க ரூ. 451 கோடி ஒதுக்கி உத்தரவு

தமிழகத்தில் இரண்டு பொறியியல் மற்றும், 10 பல வகை தொழிநுட்ப கல்லூரிகளை துவக்க, 451 கோடி ரூபாய் ஒதுக்கி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு செய்திக்குறிப்பு: தர்மபுரி மாவட்டம், செட்டிக்கரை மற்றும்

தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டியில் இரண்டு அரசு பொறியியல் கல்லூரிகள் துவக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இக்கல்லூரிகளுக்கு தேவையான கட்டடங்கள், உபகரணங்கள், அறைகலன்கள், ஆசிரியர் நியமனம், ஆய்வுக் கூடங்கள் போன்றவற்றிற்காக, இரண்டு கல்லூரிகளுக்கும், 180 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போல், திருச்சியில், ஸ்ரீரங்கம்; புதுக்கோட்டையில், கந்தர்வக் கோட்டை; விழுப்புரத்தில், சங்கராபுரம்; அரியலூர்; மதுரையில், உசிலம்பட்டி, செக்கானூரணி; தேனியில், ஆண்டிப்பட்டி உள்ளிட்ட, 10 இடங்களில் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் துவக்கபடும். இக்கல்லூரிகளுக்கு, கட்டுமானப்பணிகளுக்காக, 133 கோடி ரூபாயும், ஆய்வக கருவிகள் உள்ளிட்ட தளவாட பொருட்களுக்காக, 138 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள, பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிக்கு சொந்தக் கட்டடம் கட்ட, காஞ்சிபுரம், காரப்பேட்டையில், 4.32 ஹெக்டேர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில், அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்ட, 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...