உதவிப் பேராசிரியர்கள் 54 பேர் பணி நிரந்தரம்

புதுச்சேரி மாநிலத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய உதவிப் பேராசிரியர்கள் 54 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் புதுவை முதல்வர் என்.ரங்கசாமியை ஞாயிற்றுக்கிழமை
சந்தித்து வாழ்த்துப்
பெற்றனர்.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யேனம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 54 பேர் கடந்த 1998-ம் ஆண்டு மணி நேர உதவிப் பேராசிரியர்களாக பணியில் நியமிக்கப்பட்டனர்.
 பின்னர் அவர்கள் கடந்த 2010-ம் ஆண்டு தொகுப்பூதிய உதவிப் பேராசிரியர்களாக மாற்றப்பட்டனர்.
இந்நிலையில், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தை அவர்கள் நாடினர்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, மத்திய தேர்வாணையக் குழு 3-1-2013 அன்று இவர்களை பணி நிரந்தரம் செய்ய பரிந்துரை செய்தது.
இதனைத் தொடர்ந்து புதுச்சேரி அரசும் பணிநிரந்தர ஆணையை பிறப்பித்துள்ளது. இதையடுத்து, பணி நிரந்தரம் செய்யப்பட்ட உதவிப் பேராசிரியர் புதுவை முதல்வர் என்.ரங்கசாமியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...