மதுரை காந்தி மியூசியம் ரூ.5 கோடியில் புதுப்பொலிவு

மதுரை காந்தி மியூசியம் பராமரிப்பு பணிக்காக ரூ.4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் நிதியில் புதுப்பொலிவு காணவுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இம்மியூசியம் அமைந்துள்ள கட்டடம், ராணி மங்கம்மாள்
அரண்மனையாக முன்பு இருந்தது. சுதந்திரம் அடைந்த பின், காந்தி மியூசியமாக மாற்றப்பட்டது. அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு 1959 ஏப்.,15ல், திறந்து வைத்தார். 13.50 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய, முதல் காந்தி மியூசியம் அமைந்திருப்பது மதுரைக்கு மகுடம். 1948 ஜன.,29ல் மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். அவர், இறுதியாக அணிந்திருந்த ரத்தக்கரை படிந்த ஆடை இங்குள்ளது. மகாத்மா காந்தி சேவா கிராமத்தில் 1936 முதல் 1946 வரை தங்கியருந்தார். அதன் மாதிரி குடிசை மற்றும் அஸ்தியின் ஒருபகுதி இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை அனைவரும் பார்த்து தரிசித்து செல்கின்றனர்.

புதர் மண்டிய மியூசியம்: பத்து ஆண்டுகளுக்கு முன் காந்தி மியூசியம் பராமரிப்பு இன்றி அலங்கோலமாக காட்சியளித்தது. பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட அறிவியல் பூங்கா வீணானது. குறைந்தபட்சம் கழிப்பறை வசதி கூட இல்லாமல் பாழடைந்தது. காந்தி மியூசியத்தின் தலைவராக பொள்ளாச்சி மகாலிங்கம் பொறுப்பேற்றதும் மியூசியத்திற்கு விமோச்சனம் பிறந்தது. அவரது முயற்சியால் காந்தி மியூசியத்தை பராமரிக்க மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கியது. அதில், இரண்டரை கோடி ரூபாய் கிடைத்துள்ளது. அடுத்தகட்டமாக இரண்டரை கோடி ரூபாயை ஒதுக்க நிதியமைச்சர் ப.சிதம்பரம் உறுதியளித்துள்ளார். தமிழக அரசு தன் பங்கிற்கு இரண்டரை கோடி ரூபாய் வழங்கியுள்ளது.

புதுப்பொலிவுடன் மியூசியம்: காந்தி மியூசியம் செயலாளர் எம்.மாரியப்பன் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகள் வழங்கிய நிதியை பயன்படுத்தி மூன்று கட்டங்களாக பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது. முதற்கட்டமாக 1.25 கோடி ரூபாய் மதிப்பில் காந்தி குடில், அஸ்தி மண்டபம் உள்ளிட்டவை பராமரிக்கப்பட்டுள்ளன. மியூசியத்தில் உள்ள அரசு அருங்காட்சியகம் புதுப்பிக்கப்படவுள்ளது. ஹெஸ்ட் ஹவுஸ் அறைகள் பராமரிக்கப்படவுள்ளன. அறிவியல் பூங்கா அமைந்துள்ள இடத்தில் நிர்வாக அலுவலகம் அமைக்கப்படும். கலையரங்கத்தில் மேற்கூரை அமைக்கப்படவுள்ளது. சினிமா சூட்டிங் எடுக்க அனுமதி வழங்கப்படும். ஆனால், சினிமா தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை. பரதநாட்டியம், கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிப்பதன் மூலம் வருவாய் ஈட்ட முடியும். அந்த நிதி நல்ல காரியங்களுக்கு செலவிடப்படும், என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...