கேமரா மொபைல் போன்: மாணவர்களுக்கு தடை

  உ.பி.,யில் உள்ள, தருல் உலூம் தியோபந்த் பல்கலையில், மாணவர்கள், கேமரா மொபைல் போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உ.பி., மாநிலம், முஜாப்பர் நகர் மாவட்டத்தில்
உள்ள, முஸ்லிம் சமுதாய கல்வி நிறுவனமான, தியோபந்த் தருல் உலூம் பல்கலை, உதவி துணைவேந்தர் மவுலானா அப்துல் காலிக் கூறியதாவது: பல்கலை வளாகத்தில், மாணவர்கள், கேமரா மொபைல் போன்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வீடியோ வசதியுடைய மொபைல் போன்களையும் பயன்படுத்தக் கூடாது. சாதாரண மொபைல் போன்களை பயன்படுத்துவதற்கு, தடை எதுவும் இல்லை. இந்த தடையை மீறி, மாணவர்கள், கேமரா மொபைல் போன்களை பயன்படுத்தியது, கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த சில நாட்களில், பல்கலை விடுதியிலிருந்து, 14 கேமரா மொபைல் போன்கள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு மவுலானா அப்துல் காலிக் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...