மதுரை மேயரின் சகோதரி துணைவேந்தராக நியமனம்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணைவேந்தராக, பேராசிரியர் சந்திரகாந்தா நியமிக்கப்பட்டுள்ளார். இதன் துணைவேந்தராக இருந்த கல்யாணி, 10 மாதங்களுக்கு முன், ஓய்வு பெற்றார். இந்நிலையில், புதிய
துணைவேந்தரை தேர்ந்தெடுக்க, சென்னை பல்கலை, முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன் தலைமையில், குழு அமைக்கப்பட்டது.
உடுமலைப்பேட்டை, ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லூரி முதல்வர் மஞ்சுளா, காந்தி கிராம பல்கலை, கணித துறை தலைவர், பாலசுப்ரமணியன் ஆகியோர், குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். முன்னாள் முதல்வர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் என, 30க்கும் மேற்பட்டோருக்கு, துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தனர். இவர்களிலிருந்து, தகுதியான மூவர் பெயரை, கவர்னருக்கு, தேர்வுக் குழு பரிந்துரைத்தது. இம்மூவரில், புதிய துணைவேந்தராக சந்திரகாந்தாவை, கவர்னர் நியமித்துள்ளார்.

சந்திரகாந்தா ஜெயபாலன், 65, மதுரை மேயர் ராஜன் செல்லப்பாவின் சகோதரி. மதுரையில், பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தவர். எம்.எஸ்சி., விலங்கியல் பட்டம் பெற்று, பிஎச்.டி., பட்டம் முடித்தவர். பழனியில் உள்ள, பழநியாண்டவர் மகளிர் கல்லூரியில், 19 ஆண்டுகள் முதல்வராக பணியாற்றி, ஓய்வு பெற்றவர்.

இவர் கணவர் ஜெயபாலன், கல்லூரி முதல்வராக இருந்து, ஓய்வு பெற்றவர். மதுரை காமராஜர் பல்கலைக் கழக சிண்டிகேட் உறுப்பினராகவும், பொறுப்பு துணைவேந்தராகவும் பணியாற்றி உள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...