ஆசிரியர்களுக்கு கலை மற்றும் கைவினைப் பொருள் தயாரித்தல் பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வத்திராயிருப்பு வட்டார வளமையத்திற்குட்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கலை மற்றும் கைவினைப் பொருள்கள் தயாரித்தல் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.இப் பயிற்சியில் பாடப்
பொருளுக்கு ஏற்ப படம் வரைதல், பொம்மலாட்ட பொம்மைகள் மற்றும் முகமுடிகள் தயாரித்தல், இலைகளை வைத்து உருவங்கள் அமைத்தல், காகித உருவங்கள், பாடப் பகுதியில் உள்ள பாடல்களை இசையுடன் பாடுதல், தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் மற்றும் கொடிப்பாடலை எவ்வாறு பாடுவது, படங்களை எவ்வாறு எளிமையாக வரைவது, அச்சு மை கொண்டு உருவங்கள் அமைத்தல் உள்ளிட்ட பயிற்சிகள் நடைபெற்றது.
பயிற்சியின் கருத்தாளர்களாக ஆசிரியப் பயிற்றுநர்களும், பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் செயல்பட்டனர்.
தொடக்க நிலையில் 6 குறுவளமையங்களில் நடைபெற்ற இப் பயிற்சியில் 225 ஆசிரியர்களுகம், உயர் தொடக்க நிலையில் இரு குறுவளமையங்களில் நடைபெற்ற பயிற்சியில் 119 ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சு.ஜெயலட்சுமி தலைமையில் ஆசிரியப் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...