அமைச்சர் அறிவிப்பு பள்ளி வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்


பள்ளி வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டு முறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடி க்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் ரமாகாந்த் கோஸ்வாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.டெல்லி சுப்ரடோ பார்க் பகுதியில் உள்ள விமான படை
பள்ளி வாகனத்தின் மீது ஒரு வேன் மோதிய விபத்தில் சிக்கி 5 வயது சிறுமி பலியானாள்.இதைத்தொடர்ந்து பள்ளி வாகனங்களுக்கு சில புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துள்ளது. இதுபற்றி நிருபர்களிடம் அமைச்சர் ரமாகாந்த் கோஸ்வாமி கூறியதாவது:பள்ளி வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டு  அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். விதிகளை மீறியதற்காக போக்குவரத்து போலீசாரால் 2 முறை அபராதம் விதிக்கப்பட்டவர்கள் அல்லது தண்டிக்கப்பட்டவர்களை டிரை வராக அமர்த்தக்கூடாது. டிரைவர்கள் சாம்பல் நிற கால்ச்சட்டையும் அதே நிறத்தில் மேல் சட்டையும் அணிந்து இருக்க வேண்டும். அத்துடன் டிரைவர், பெயருடன் கூடிய அடை யாள அட்டையை அவர் தனது சட்டையில் நன்றாக தெரியும்படி அணிந்து இருக்க வேண்டும்.

அந்த வாகனம் யாருக்கு சொந்தமானது என்ற விவரமும் அந்த அடையாள அட்டையில் இருக்க வேண்டும்.நிறுத்தல் கோட்டை தாண்டியது, அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட மின்னல் வேகத்தில் சென்றது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது அல்லது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் அபாயகரமாக வாகனத்தை ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்தியது மற்றும் பஸ் விபத்தில் பயணிகள் பலியாக காரணமானவர்களை கண்டிப்பாக பள்ளி வாகனங்களு க்கு டிரைவர் ஆக நியமிக்கக் கூடாது.பள்ளிக்கு சொந்தமான பஸ்களை மாணவர்களை அழைத்து வருவதற்கும், அவர்களை வீட்டில் கொண்டுபோய் விடுவதற்கும் மட்டுமே நிர்வாகம் பயன்படுத்த வேண்டும். பள்ளிக்கு சொந்தமான பஸ்களில் ஏறும் மற்றும் இறங்கும் வழிகளில் மடங்கி வழிவிடும் தானியங்கி கதவுகள் பொறுத்தப்பட வேண்டும்.ஒவ்வொரு பஸ்சிலும் அங்கீகாரம் பெற்ற நடத்துனர்களை நியமிக்க வேண்டும். மேலும் பள்ளி மாணவர்களுக்காக பயன் படு த்தப்படும் எல்லா வாகனங்களுக்கும் தங்க நிற வண்ணம் பூசுவதுடன், பஸ்சில் முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி மற்றும் மாணவர்களின் பைகளை வைக்க அடுக்கு பலகை போன்ற அனைத்து வசதிகளும் அந்த பஸ்சில் இருக்க வேண்டும்.மேற்கண்ட எல்லா வழிகாட்டு முறைகளையும் எல்லா பள்ளி பஸ்களிலும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இந்த வழிகாட்டு முறைகளை கடைபிடிக்காத பள்ளி வாகனங்கள் மீதும், அந்த பள்ளி நிர்வாகம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...