பஸ் படிக்கட்டு பயணம் தடுப்பு நடவடிக்கை என்ன?


பஸ் படிக் கட்டு பயணத்தை தவிர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக போக்குவரத்து செயலாள ருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் பஸ் படிக்கட்டில் மாணவர்கள் பயணம் செய்வது தொடர்பான படம், பத்திரிகைகளில் வெளியானது. இதை ஐகோர்ட் கிளை தாமாக முன்வந்து
வழக்காக எடுத்து விசாரித்தது. ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.இந்த வழக்கு நீதிபதிகள் தமிழ்வாணன், ரவிச்சந்திர பாபு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மதுரை போக்குவரத்து துணை ஆணையர் பன்னீர்செல் வம் தாக்கல் செய்த மனு: மதுரை மாநகரில் 300 தாழ்தள பஸ்கள் ஓடுகின்றன. அவைகளில் தானியங்கி கதவுகள் உள்ளன. படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

 முதல் தடவை ஸி100 தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்தால் ரூ.300 வரையும் அபராதம் வசூலிக்கப்படுகிறது. படிக்கட் டில் நின்று பயணம் செய்த 37 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மாணவர்கள் மத்தியில் பஸ் படிக்கட்டில் நின்று பயணம் செய்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. பஸ்சில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றக்கூடாது என நடத்துனர், ஓட்டுனர்களிடம் கூறி உள்ளோம். கூடுதலாக ஆட்களை ஏற்றிச் சென்றால் ஓட்டுனர், நடத்துனர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. என்.எஸ்.எஸ், என்.சி.சி முகாம்களிலும் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.திண்டுக்கல் எஸ்பி ஜெயச்சந்திரன் தாக்கல் செய்த பதில் மனு:கோர்ட் உத்தரவுப்படி படிக்கட்டு பயணத்தை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

படிக்கட்டில் பயணம் செய்வோரை இறக்கவிட்டு, வேறு பஸ்சில் செல்லுமாறு அறிவுறுத்துகிறோம். படிக்கட்டு பயண த்தை தடுப்பது தொடர்பாக டிஜிபி அனைத்து மாவட்ட கலெக்டர், எஸ்.பிகள், போலீஸ் கமிஷனர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் படிக்கட்டில் பயணம் செய்தது தொடர்பாக 518 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். அதில் 75 பேர் மாணவர்கள். 112 பேர் ஓட்டுனர், நடத்துனர்கள், 331 பேர் பொதுமக்கள். அவர்களிடமிருந்து ரூ.51 ஆயிரத்து 800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.தமிழகத்தில் பஸ் படிக்கட்டு பயணத்தை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடி க்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய போக்குவரத்து செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...