அவசரக் காலத்தில் அள்ளித்தெளித்ததால், எத்தனை குளறுபடிகளை சந்திக்க வேண்டியுள்ளது? DINAMALAR


பட்டதாரி, முதுநிலை பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் என, 20,920 ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணையை, ஒரே நேரத்தில் வழங்கி, ஒரு மாபெரும் சாதனையை ஏற்படுத்தியது சாதாரணமான
விஷயமல்ல; முதல்வரை பாராட்டலாம். குறுகிய காலகட்டத்தில், இந்த பணி நியமன ஆணைகள் தயாரிக்கப்பட்டு வழங்கியது, சாதனை என்றாலும், பின்னால் வரப் போகும் வேதனைகளை யோசிக்காமல் செயல்பட்டது, பெரிய தவறு என்பதை, தற்போது யோசிக்க வேண்டியுள்ளது.

அவசரக் காலத்தில் அள்ளித்தெளித்ததால், எத்தனை குளறுபடிகளை சந்திக்க வேண்டியுள்ளது? தகுதியில்லாதவர்கள் பலர் தேர்வு பெற்றுள்ள தகவலை, டி.ஆர்.பி.,யின் கவனத்திற்கு, பல தேர்வர்கள் கொண்டு சென்றனர். புகார்களை அலட்சியப்படுத்தாமல், தகுதியற்றவர்கள், பலர் தேர்வாகியிருப்பதை டி.ஆர்.பி., கண்டுபிடித்துள்ளது. அரசியல்வாதிகளின் பதவிக் காலம், ஐந்தாண்டுகள் மட்டும் தான். அந்த காலகட்டத்திற்குள்ளாக, பல நல்ல காரியங்களை செய்து முடித்து, சாதனை புரிய வேண்டுமென்று அவர்கள் நினைப்பதும், அதற்காக, சில அவசர காரியங்களை செய்வதும், அவசர சட்டங்களை இயற்றுவதும், இயற்கையானது.

ஆட்சியாளர்கள், சில செயல்களை செய்ய முற்படும் போது, அதிலுள்ள சாதகங்கள், பாதகங்கள்; நல்லது, கெட்டது என்ற விளக்கங்களை, ஆட்சியாளர்களுக்கு எடுத்துச் சொல்லி, நல்வழி காட்டவேண்டியது, பல ஆண்டுகள், தொடர்ந்து ஒரே துறையில் பணியாற்றும் அதிகாரிகள் கடமை. கொஞ்சம் கால அவகாசம் எடுத்து, நிதானமாக செயல்பட்டிருந்தால், குளறுபடிகள் நடக்க வாய்ப்பே இருக்காது. மீண்டும் மறுபரிசீலனை; களையெடுப்பு என்றால், எவ்வளவு விபரீதமான செயல். கால, நேர விரயம், தேவையற்ற செலவு என்று எத்தனை பிரச்னைகள்? அப்படி மீண்டும் வடிகட்டும் போது, பலருக்கு பணி நியமன ஆணை ரத்தாகலாம். ஏற்கனவே நியமன ஆணைகளைப் பெற்று, பணியாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு, "உனக்கு பணி கிடையாது' என்று சொன்னால், அவர்கள் மனநிலை எப்படியிருக்கும்? வசதியற்றவர்கள் என்ன செய்வர்? அரசு, இனியாவது விழித்து, பணி நியமனங்களில், நிதானப் போக்கை கையாண்டால் அனைவருக்கும் நல்லது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...