வேளாண் அலுவலர் தேர்வு முடிவு வெளியீடு

வேளாண் அலுவலர் தேர்வு முடிவை, டி.என். பி.எஸ்.சி., வெளியிட்டது. வேளாண் துறையில், காலியாக உள்ள, 454 வேளாண் அலுவலர் காலிப் பணியிடங்களை நிரப்ப, கடந்த அக்., 28ல், தேர்வாணையம், போட்டித்
தேர்வை நடத்தியது. தற்போது, இதன் முடிவு, தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
எழுத்து தேர்வு, 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, 40 மதிப்பெண்களுக்கான நேர்முகத் தேர்வு, பிப்., 11 முதல், 15 வரை, தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது. ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில், இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டு, அதன்பின், பணி ஒதுக்கீடு கலந்தாய்வு நடத்தப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...