பல்கலை மாணவர்களுக்கு வகுப்பு நடத்த வெளிநாட்டு பேராசிரியர்கள் தேர்வு

பல்கலைகழக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த, வெளிநாட்டு பல்கலை பேராசிரியர்களை தேர்வு செய்யும் திட்டத்துக்கு, அரசு, ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள, 10 பல்கலைக் கழகங்களில், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சிங்கப்பூர்,
அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த, ஏழு பேராசிரியர்களை, சென்னை பல்கலைக்கழகம் தேர்வு செய்துள்ளது. உயர் அறிவியல், உயிரி அறிவியல் தொழில்நுட்பம், கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், சமூக அறிவியல், இந்திய மொழிகள், மேலைநாட்டு மொழிகள், மேலாண்மை மற்றும் வணிக கல்வி உள்ளிட்ட, 10 பாடங்களில், வெளிநாட்டு பேராசிரியர்கள், மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க உள்ளனர். காமராஜர், மனோன்மணியம் சுந்தரனார், பாரதியார், பாரதிதாசன், அழகப்பா, சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட, 10 பல்கலைக் கழகங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பல்கலைக் கழகத்தின், துறைசார்ந்த வெளிநாட்டு பேராசிரியர்கள் குறித்த தவகல்களை சேகரிக்க, சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.
வெளிநாட்டு பேராசிரியரை தேர்ந்தெடுக்க, பல்கலைக்கழக துணைவேந்தர், திட்டம் மற்றும் வளர்ச்சி துறை இயக்குனர், 10 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பேராசிரியர்கள், 15 நாட்கள், மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துவர். வேலைவாய்ப்பு, பாடத் திட்டங்களில் எதிர்காலத்தில் ஏற்படும் வளர்ச்சி, வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உள்ள வாய்ப்புகள், ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல் உள்ளிட்டவை குறித்து, வகுப்புகளை அவர்கள் நடத்த உள்ளனர்.

இதுகுறித்து, சென்னை பல்கலைக் கழக திட்டம் மற்றும் வளர்ச்சி துறை இயக்குனர் துரைசாமி கூறியதாவது: பல்கலை துறை தலைவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், உயிரி அறிவியல் பாடத்திற்கு, சிங்கப்பூர் பேராசிரியர் ஸ்ரீராம் ராம கிருஷ்ணாவும், உயர் அறிவியல், மேலை நாட்டு மொழி, கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பாடங்களுக்கு, அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் ரவீந்திரநாத், ஆனம் கோ கோவர்த்தன், கோபிநாத், சேதுராமன் ஆகியோரும் தேர்வு செ#யப்பட்டுள்ளனர். வேதியியல் பாடத்திற்கு, ஜெர்மனி பேராசிரியர் பிரிஸ் ஸ்கோல்ஸ், சமூக அறிவியல் பாடத்திற்கு, இங்கிலாந்து பேராசிரியர் மைக்கேல் வேங் என, ஏழு வெளிநாட்டு பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பிப்ரவரி மாதத்திற்குள், வகுப்புகள் துவங்கும். பிற துறை பேராசிரியர்களை தேர்வும் செய்யும் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு துரைசாமி கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...