கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை: ஆட்சியர் உத்தரவு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களை இட ஒதுக்கீóட்டின் அடிப்படையில் சேர்க்க வேண்டும் என்று
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வா. சம்பத் தெரிவித்தார்.
÷அவரது அறிக்கை:
÷விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்கள் இட ஓதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கப்பட வேண்டும். ஆதிதிராவிட, பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளில் கல்வி உதவித்தொகை பெற தகுதியானவர்கள் இருந்தால் அவர்களிடம் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தாமல், கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகை விண்ணப்பங்களை குறைபாடின்றி பூர்த்தி செய்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் ஜனவரி 2013ம் மாதத்துக்குள் அளிக்க வேண்டும்.
 ஆதிதிராவிட நலத்துறையின் மூலம் ஆதிதிராவிட, பழங்குடியின மாணவ, மாணவியருக்கு  போஸ்ட் மெரிட் கல்வி உதவித் தொகை மேல்நிலைப்பள்ளி, விடுதி மாணவர்களுக்கு ரூ.380, விடுதி சாராதவர்களுக்கு ரூ.230, பொறியியல் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு ரூ. 1,200, விடுதி சாராதவர்களுக்கு ரூ.550, கலை மற்றும் அறிவியல் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு ரூ.1,200, விடுதி சாராதவர்களுக்கு ரூ.300, பாலிடெக்னிக் படிக்கும் விடுதி மாணவர்களுக்கு ரூ.355, விடுதி சாராதவர்களுக்கு ரூ.185, தொழிற்பயிற்சி படிக்கும் விடுதி மாணவர்களுக்கு ரூ.730, விடுதி சாராதவர்களுக்கு ரூ.380 வீதம் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
÷உதவித்தொகையை பெற ஆதிதிராவிடர், பழங்குடியினர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.2,00,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் 3 முதல் 5ம் வகுப்பு படிக்கும் ஆதிதிராவிட, பழங்குடியின கிராமப் புறத்தில் கல்வி படிக்கும் மாணவியருக்கு ரூ.500 வீதமும், 6ம் வகுப்பு மாணவியருக்கு ரூ. 1,000ம் வீதமும் வழங்கப்படுகிறது.
÷சுகாதார குறைவான தொழில் புரிவோர் குழந்தைகளுக்கு பிரிமெட்ரிக் கல்வி உதவிóத் தொகையாக 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ஆண்டுக்கு ரூ.1,850 வீதம் வழங்கப்படுகிறது. இவற்றைப்பெற ஜாதி மற்றும் வருமானம் வரையரை இல்லை. மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகையாக ரூ. 1,750 வழங்கப்படுகிறது. 
÷சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் முதல்வர்கள் தகுதியான மாணவ, மாணவிகளின் விண்ணப்பத்தினை ஜாதி, வருமானச்சான்றுகளுடன் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரிடம் அளித்து உதவித்தொகையை பெற்று உரிய காலத்தில் வழங்க வேண்டும். ÷மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, தனியார், பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொழில்நுட்ப பயிலகம், தொழிற்பயிற்சிப் பள்ளிகள் மற்றும் உதவித்தொகை கோரி மனுச்செய்யும் அனைத்து நிறுவனங்களும் தங்கள் நிறுவனம் எந்த முகவரியில் இயங்குகிறது என்ற விவரத்தை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...