அரசு கல்லூரி துணை பேராசிரியர்கள் எதிர்பார்ப்பு

அரசு கல்லூரிகளில் பணியாற்றும் துணை பேராசிரியர்களுக்கு, காலமுறை சம்பளம் நிர்ணயிக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், மதுரை காமராஜ்
பல்கலைக்கு உட்பட்ட திருமங்கலம், வேடசந்தூர், அருப்புக்கோட்டை பகுதிகள் உட்பட 11 இடங்களில் அரசு கல்லூரிகள் துவங்கப்பட்டன. இதில், 200 துணை பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இவர்களுக்கு, தொகுப்பூதியம் அடிப்படையில் ரூ.10 ஆயிரம், மாதச் சம்பளம் வழங்கப்படுகிறது. அரசு கல்லூரிகளில், பல்கலை மானியக்குழு விதிப்படிதான் துணைப் பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. பி.எச்டி., முடித்த அல்லது மாநில தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதியும் இவர்களிடம் உள்ளது. மேலும், இனசுழற்சி முறையும் பணி நியமனத்தில் கடைபிடிக்கப்பட்டுள்ளது.

துணை பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது: ஓராண்டுக்கு முன் பணியில் சேர்ந்தோம். தற்போதுள்ள விலைவாசியில், ரூ.10 ஆயிரம் மாத சம்பளம் மூலம் குடும்பத்தை நடத்துவது பெரும் சவாலாக உள்ளது. பல்கலை மானிய குழு எதிர்பார்க்கும் அனைத்து தகுதிகளும் உள்ள எங்களிடம் உள்ளது. எங்களுக்கு, காலமுறை சம்பளம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, எங்கள் குடும்பம் மற்றும் எதிர்காலத்தை காப்பாற்ற வேண்டும், என்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...