மொழி பாடங்களுக்கு புத்தகங்கள் இல்லை:

தமிழகம் முழுவதும், சிறுபான்மை மொழி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு முதல் பருவ, மொழி பாட புத்தகங்கள் வழங்கவில்லை. இதனால், மும்மொழி பயிலும், தமிழக எல்லை மாணவர்களின் கல்வி கேள்விக்குறி ஆகியுள்ளது. தமிழகத்தில், கர்நாடகா, ஆந்திரா மாநில எல்லையை ஒட்டியுள்ள, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, வேலூர்,
திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டிவனம், கடலூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், சிறுபான்மை மொழிப் பள்ளிகள் அதிகளவில் உள்ளன.

குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது மொழி பேசும் மக்கள், அதிகம் வசிக்கின்றனர். அதனால், அனைத்து மொழி பேசும் குழந்தைகள் படிக்க வசதியாக, மாவட்டம் முழுவதும், 298 கன்னடம், தெலுங்கு, உருது மற்றும் மலையாளம் மொழி அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாவில், 15 கன்னடம், 21 உருது, ஐந்து மலையாளம் மற்றும், 257 தெலுங்கு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. தற்போது, தமிழக அரசின் புதிய கல்வி திட்டத்தால், நடப்பு கல்வி ஆண்டு முதல், கல்விமுறையை மூன்று பருவமாக பிரித்து, ஒவ்வொரு பருவத்துக்கும் தனித்தனியாக பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. அரையாண்டு தேர்வு முடிந்து மீண்டும் அரசு பள்ளிகள் திறக்கப்பட்டு, மூன்றாம் பருவ காலம் துவங்கியுள்ளது.

அரசு, தமிழ் வழிப் பள்ளிகளில் மட்டும் மூன்றாம் பருவ பாடப்புத்தகங்களை வழங்கி வருகிறது.ஆனால், கன்னடம், தெலுங்கு, உருது மற்றும் மலையாளம் ஆகிய சிறுபான்மை மொழி பள்ளிகளில், இன்னும் முதல் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கவில்லை. ஆசிரியர்கள், தமிழ் வழி பாடப்புத்தகங்களை வைத்து, பெயரளவுக்கு மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கின்றனர்.இதனால், சிறுபான்மை மொழி கல்வி படிக்க முடியாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுபான்மை மொழி மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: கடந்த ஜூன் மாதம் பள்ளி திறந்தது முதல், புத்தகம் இல்லாமல், மாணவர்கள் வெறும் வாய்மொழி கல்வி மட்டும் படிக்கின்றனர். ஆனால், பாடப்புத்தகங்கள் வழங்க கல்வி அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை. சிறுபான்மை பள்ளிகளுக்கு மொழி பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்படவில்லை. அதனால், இந்த கல்வி ஆண்டு முழுவதுமே பாடப்புத்தகங்கள் வழங்குவது கேள்விகுறியாகியுள்ளது. கல்வி அதிகாரிகளிடம் கேட்டால், மவுனம் சாதிக்கின்றனர். இதனால், சிறுபான்மை மொழி மாணவர்களின் கல்வி திறன் மழுங்கடிக்கப்படுகிறது.
அரசு சிறுபான்மை மொழிப் பள்ளிகளை, படிப்படியாக தமிழ் மொழிப் பள்ளிகளாக மாற்ற திரைமறைவு நடவடிக்கை எடுத்துள்ளதா என, சந்தேகிக்க தோன்றுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி அன்பு கூறுகையில், ""தமிழ் பாடப்புத்தகங்களை எளிதாக அச்சடித்து வழங்க முடிகிறது. ஆனால், அனைத்து சிறுபான்மை மொழி பாடப்புத்தகங்களை அச்சடிப்பதில் ஏற்பட்ட சிரமத்தால் புத்தகங்கள் வழங்க முடியவில்லை. விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், '' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...