அரசுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பரிசு

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்கள் வழங்கும் விழா ஆண்டு
தோறும் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் ஆர்.எம். அப்துல்கரீம் நினைவரங்கத்தில், பெரிய பள்ளிவாசல் முஸ்லிம் ஜமாத் தலைவர் கே. காதர்மைதீன் தலைமையில் இன்று பகல் 3 மணியளவில் நடைபெற்றது.
மதுரைக் கிளை தலைவர் கே. முகமது இப்ராஹிம், சென்னைக் கிளை தலைவர் எம். முகமது இப்ராஹிம், திடல் பள்ளி வாசல் தலைவர் சி. அப்துல் காதர், முஸ்தபா நகர் பள்ளி வாசல் தலைவர் வி. சையத் இப்ராஹிம், பள்ளி தாளாளர்கள் ஒய். கபீக் முகம்மது, ஏ. காசின் அமீம், ஹிம்மத்துள் இஸ்லாம் வாலிபர் சங்கத் தலைவர் ஏ. சேட்டு ஜாகீர் உசைன் முன்னிலை வகித்தனர்.
பெரிய பள்ளி வாசல் இமாம் எஸ். அகமது பசில் ஷேட்டு ஆலிம், கி-ஆத்து ஓதினார். பள்ளி தாளாளர் அன்வர் வரவேற்றார். பள்ளிக் கல்விக் குழு தலைவர் எம். முகமது மீரா பொன்னாடை அணிவித்தார்.
பிளஸ் 2 வகுப்பில் முதலிடம் வகித்தவருக்கு தமிழக ஜவுளி கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் சுந்தரராஜூம், இரண்டாம் இடம் வகித்தவருக்கு முதுகுளத்தூர் தொகுதி எம்எல்ஏ,எம் முருகனும், 3ம் இடம் வகித்தவருக்கு மாவட்ட ஊராட்சிகள் கவுன்சில் தலைவர் எம். சுந்தரபாண்டியனும் பதக்கங்களை வழங்கினர்.
இதேப்போன்று 10ம் வகுப்பில் முதல் மூன்று இடம் வகித்தவர்களுக்கும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுதந்திரா காந்தி இருளாண்டி, பேரூராட்சித் தலைவர் சசி வர்ணம் ராமர், முஸலிம் ஜமாத் பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்டோர் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். விழாவில் முன்னாள் தலைலமை ஆசிரியர்கள் அப்துல் காதர், காதர் முகைதீன் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஞானதாஸ், வட்டார துவக்க கல்வி அதிகாரி சூசைதாஸ், துவக்கப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர்கள் லியாகத் அலி, வரிசை முகமது ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...