முதுகலை பட்டதாரி ஆசிரியர் கோரிக்கை

தமிழகத்தில் மேல்நிலைக் கல்விக்கு தனி இயக்குனரகம் உருவாக்கப்பட  வேண்டும் என, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
 இச்சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம், மதுரையில் மாவட்டத்
தலைவர் ஜி.மருதமுத்து தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் எஸ்.அருள்ராஜ் முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் ஆர். மதியழகன், பொதுச்செயலர் ரா. எட்வின், பொருளாளர் கே. அனந்தராமன், அமைப்புச் செயலர் டி.இளங்கோவன், எஸ்.இளவரசு மற்றும் பலர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக, மாவட்டச் செயலர் எம். சங்கரலிங்கம் வரவேற்றார். மாவட்ட அமைப்புச் செயலர் என். ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.
 நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
 பள்ளிக் கல்வியின் தரம் உயர்த்த   நலத்திட்டங்களை செயல்படுத்து, 2,800-க்கு மேல் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை  வழங்கியும், 1,500 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கிய  முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
 மேல்நிலைக் கல்விக்கென தனி இயக்குநரகம் அமைக்க வேண்டும். ஊதியக்குழு முரண்பாடுகளை நீக்க வேண்டும்.   பழைய முறையைத் தொடர வேண்டும். உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின்  பணப்பலன்கள் தொடர்பான கோப்புகள் தேங்குவதை, கல்வித்துறை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும். மாதம் ஒருமுறை மாவட்டக் கல்வி அலுவலர்கள் முகாமை நடத்த  வேண்டும். தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீட்டிற்கென மாவட்டத் தலைநகரங்களில்  நிரந்தர வசதி செய்யப்பட வேண்டும். விடைத்தாள் மதிப்பீட்டு மதிப்பூதியத்தை 2  மடங்காக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...