பெண்களை மதிப்புடன் நடத்த பாடத்திட்டத்தில் போதனை: மத்திய அரசு பரிசீலனை

மாணவர்களின் பாடத்திட்டத்தில் பெண்களை மதித்து நடந்து கொள்வதற்கான போதனைகளைச் சேர்ப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பல்லம் ராஜு
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கேரள மாநிலம் கொச்சியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
பெண்களை மதித்து நடந்து கொள்வது, நல்லொழுக்கம் ஆகியவை குழந்தைகளுக்குக் கற்றுத்தரப்பட வேண்டும். இது, பெண்கள் குறித்தும், சமூகத்தில் அவர்களுக்கான இடம் குறித்தும் இளைய தலைமுறைக்கு நல்ல கண்ணோட்டம் ஏற்பட உதவும். இது தொடர்பான போதனைகளை மாணவர்களின் பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து தேசிய கல்வி ஆராய்ச்சிக் கவுன்சில், பல்கலைக்கழக மானியக்குழு உள்ளிட்ட அமைப்புகளுடன் விவாதிக்க உள்ளேன்.
இதேபோல், கல்வி நிலைய வளாகங்களுக்குள் பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொள்வதைத் தடுக்க கடுமையான நெறிமுறைகளைக் கொண்டுவருமாறு பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும், எனது அமைச்சகத்துக்கும் அறிவுறுத்தியுள்ளேன். நமது கல்வி நிறுவனங்கள் பெண்களுக்குப் பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம். கேரளத்தில் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம் அமைக்க வேண்டும் என்று நீண்டகாலமாகக் கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. அது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்றார் பல்லம் ராஜு.
தரமான கல்வி: முன்னதாக, கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், ""12ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் குழந்தைகளுக்குத் தரமான கல்வி வழங்க முக்கியத்துவம் அளிக்கப்படும். கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் அங்கீகாரம் பெற வேண்டும் என்று நாங்கள் ஊக்கப்படுத்தி வருகிறோம்.
அங்கீகாரத்தைக் கட்டாயமாக்குவதற்கு ஒரு மசோதாவையும் கொண்டு வந்தோம். துரதிருஷ்டவசமாக நாடாளுமன்றத்தில் வேறு சில பிரச்னைகள் காரணமாக அதை நிறைவேற்ற இயலவில்லை.
நாட்டில் உயர் கல்வியில் 30 சதவீத ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. இது போன்ற விஷயங்களைச் சரிசெய்ய வேண்டியுள்ளது'' என்று தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...