போலியோ இல்லாத இரண்டாம் ஆண்டு: கொண்டாடுகிறது இந்தியா

வரலாற்றின் மிக அரிய நிகழ்வாக போலியோ அற்ற இந்தியா -  இரண்டாம் ஆண்டாக ஞாயிற்றுக் கிழமை இன்று கொண்டாடப்படுகிறது.
போலியோவை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு
மேற்கொண்டு வருகிறது. பொது சுகாதாரத் திட்டங்கள், விழிப்புணர்வு இயக்கம், பல்வேறு முகாம்கள் மூலம் போலியோவை அறவே ஒழிக்க இந்தியா எடுத்து வந்த நடவடிக்கைகள் மூலம் பலன் கிடைத்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டில் இரண்டு வயதாகும் மேற்கு வங்க மாநிலம் ஹௌராவைச் சேர்ந்த ருக்‌ஷார் என்பவர்தான் கடைசியாக போலியாவால் பாதிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டவர். அதன் பின்னர் போலியோ பாதித்த குழந்தைகள் எதுவும் கண்டறியப்படவில்லையாம்.  
கடந்த சில வருடங்களாக இந்திய அரசு 24 லட்சம் தன்னார்வத் தொண்டர்களுடனும் 1.5 லட்சம் முதல்நிலை ஊழியர்களுடனும் சுமார் ரூ.1,000 கோடி செலவில் இதற்கான விழிப்புணர்வு பிரசுரங்கள், பிரசாரங்கள், தடுப்பு சிகிச்சைகள் என பலவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
17 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் தேசிய அளவில் போலியோ தடுப்பு மருந்துகளை குறைந்தது வருடத்துக்கு 6 முதல் 8 தடவைகள் போட்டுக்கொண்டுள்ளனர்.
இருந்தாலும், நிபுணர்கள் தற்போது சில அறிவுறுத்தல்களை எச்சரிக்கைகளை வழங்கியுள்ளனர்.
போலியோ நோய்க் கிருமிகளும், பாகிஸ்தான், ஆப்கன், வங்கதேசம் வழியே எல்லை தாண்டி வரக்கூடும். கவனம் தேவை என்று எச்சரிக்கிறார்கள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...