மின்னணு ஓட்டு பதிவு இயந்திரத்தில் ஓட்டு போட்டதும் ரசீது: தேர்தல் ஆணையம்

"மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் ஓட்டை பதிவு செய்ததும், வாக்காளர்களுக்கு ஓட்டளித்ததற்கான ரசீது வழங்குவது விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்' என, சுப்ரீம் கோர்ட்டில், தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில், வாக்காளர்கள்
ஓட்டை பதிவு செய்ததும், ரசீது கிடைக்கும்படி செய்ய, தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி, ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு, நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கோகாய் அடங்கிய, "பெஞ்ச்' முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் அசோக் தேசாய், நீதிபதிகள் முன் கூறியதாவது:மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில், ஓட்டை பதிவு செய்ததும், ரசீது வழங்கும் நடைமுறையை அமல்படுத்துவது தொடர்பாக, பல்வேறு மாநிலங்களில், குறிப்பிட்ட சில ஓட்டுச் சாவடிகளில் மட்டும், பரிசோதித்து பார்க்கப்பட்டது. அந்த வகையில், 180 ஓட்டுச் சாவடிகளில் பரிசோதித்து பார்க்கப்பட்டது.இதன் முடிவை, நிபுணர்கள் கமிட்டி ஆய்வு செய்து வருகின்றனர். அக்கமிட்டி ஒப்புதல் அளித்ததும், அடுத்து வரும் தேர்தலில் அமல்படுத்தப்படும்.இது தொடர்பாக, 17 முறை ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இயந்திரங்களை தயாரித்து அளிப்பவர்கள், இந்த நடைமுறையை செயல்படுத்தி கொடுத்ததும், இன்னும் சில மாதங்களில் அமலுக்கு வரும். இருப்பினும், முதலில் இடைத்தேர்தல், பின், மாநில சட்டசபை தேர்தல், பொதுத் தேர்தல் என, படிப்படியாக அமல்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...