எம்.எஸ்சி., செய்முறை தேர்வு நடக்கும் இடங்கள் : காமராஜ் பல்கலை அறிவிப்பு


மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்கக (அல்பருவ முறை) எம்.எஸ்சி., படிப்புக்கான, செய்முறை தேர்வுகள் (2011-12), ஜன.,28 ல், துவங்குகின்றன. மின்னனுவியலும் தகவலியலும்: முதல் (12சி) மற்றும் இரண்டாம் ஆண்டு (11சி) மாணவருக்கு, ஜன., 28, 29 ல், மதுரை
பசுமலை சவுராஷ்டிரா கல்லூரியிலும்; பிப்., 2, 3 ல், சென்னை சோழிங்கநல்லூர் முகமது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் நடக்கிறது.

எம்.எஸ்சி., வேதியியல் (தமிழகம் மட்டும்):முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு, ஜன., 28 முதல் 31 வரை, மதுரை நாகமலை புதுக்கோட்டை என்.எம்.எஸ்.எஸ்., வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி. பிப்., 2 மற்றும் 3 ல், சென்னை, முகமது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

எம்.எஸ்சி., புவியியல் (தமிழகம் மட்டும்): முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு (12சி) ஜன., 28, 29 லிலும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு (11சி) ஜன.,30, 31 மற்றும் பிப்.,1 ல், மதுரை நாகமலைபுதுக்கோட்டையில் உள்ள என்.எம்.எஸ்.எஸ்., வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மற்றும் திருப்பாலை யாதவா கல்லூரியிலும் தேர்வுகள் நடக்கின்றன.
இத்தகவலை, பல்கலை கூடுதல் தேர்வாணையர் (பொறுப்பு) சாராதாம்பாள் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...