ஏற்கனவே மொழிபெயர்க்கப்பட்ட நூலுக்கு ரூ.1.50 கோடி ஒதுக்கீடா?


ஏற்கனவே, சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளுக்கு, மறுபடி மொழி பெயர்ப்பதற்காக, 1.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி
உள்ளது.
தமிழ் இலக்கியங்களை, உலக மக்கள் அனைவரும் அறிவதற்காக, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், மொழிபெயர்ப்புப் பணிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, அரபி, சீன மொழிகளில் முதற்கட்டமாக, திருக்குறள் மற்றும் பாரதி, பாரதிதாசன் ஆகியோரின், தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றில், அரபு மொழியில் திருக்குறள் மொழி பெயர்த்து, அச்சாகும் தருவாயில் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், சீன மொழியில், திருக்குறள் மற்றும் கவிதைகளை மொழி பெயர்க்க, 3 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. மேலும், திருக்குறளை மொழி பெயர்க்க, 1.50 கோடி ரூபாயும், கவிதைகளை மொழி பெயர்க்க, 1.50 கோடி ரூபாயும், பகிர்ந்தளிக்க முடிவு செய்தது. இதில், 1.50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட திருக்குறள், ஏற்கனவே சீனமொழியில் மொழிபெயர்க்கப்பட்டு விட்டது என்பது, குறிப்பிடத்தக்கது. சீன மொழியில் திருக்குறளை மொழிபெயர்க்கும் பொறுப்பு, அதே சீன கவிஞர் யூஸியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், தமிழ் அறிஞர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ஏற்கனவே மொழிபெயர்க்கப்பட்ட நூலை, திருத்தி வெளியிடுவதற்கு இவ்வளவு பணம் செலவாகாது. அவ்வாறு பிழைகள் இருந்தால், தமிழக அரசின் சார்பில், கோரிக்கை விடுத்து திருத்தி வெளியிட முயற்சி எடுத்திருக்கலாம். சீன மொழியில் பெயர்ப்பதற்காக ஒதுக்கப்பட்ட, 1.5 கோடி ரூபாயை வேறு மொழியில், மொழி பெயர்ப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கலாம். ஆனால், மீண்டும் அதே பணிக்காக, கோடிகளை கொட்டிக் கொடுப்பது, தமிழ் வளர்ச்சிக்கு உதவாது; மாறாக, தனி நபர்கள் சம்பாதிப்பதற்கே, அது உதவி செய்யும் என்பது, பெரும்பாலான தமிழறிஞர்களின் எண்ணம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...