150 மாணவ, மாணவிகளுக்கு "முதல்வன் விருது' வழங்கல்


ஈரோடு கொங்கு வேளாளர் இளைஞர் சங்கம், கொங்கு கலையரங்கம், கவிதாலயம், கவிதாலயம் இசைப்பயிற்சிப்பள்ளி சார்பில் "முதல்வன் விருது' வழங்கும் விழா நடந்தது.ஈரோட்டில் உள்ள அனைத்து
பள்ளிகளிலும், 2012ம் ஆண்டு பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில் அந்தந்த பள்ளிகளில் முதல் மார்க் பெற்ற, 150 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தமிழக தலைமை வனபாதுகாவலர் கண்ணன், உமா கண்ணன், ஈரோடு பயிற்சி உதவி கலெக்டர் விஜயகார்த்திகேயன், டி.ஆர்.ஓ., கணேஷ் ஆகியோர் "முதல்வன் விருதை' மாணவ, மாணவிகளுக்கு வழங்கினர்.ஈரோடு கொங்கு கலையரங்க தலைவர் பாலு என்ற பாலசுப்பிரமணியன், செயலாளர் காமதேனு ராஜமாணிக்கம், பொருளாளர் சின்னசாமி, கொங்கு செவாலியர் கொளந்தசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.கீதா மருத்துவமனை டாக்டர் துரைராஜ், சீனியர் ஆடிட்டர் நடராஜன், அம்மன் கல்லூரி தாளாளர் ஜெயலட்சுமி ஆகியோர் பேசினர்.கவிதாலயம் ராமலிங்கம் நன்றி கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...