இன்று பிளஸ் 2 செய்முறைத் தேர்வு:35,259 மாணவர்கள் பங்கேற்பர்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 233 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 35,259 மாணவர்களுக்கு பிப்ரவரி 4-ம் தேதி முதல் செய்முறைத் தேர்வு தொடங்குகிறது. மாவட்டத்தில் 35,259 மாணவ, மாணவிகள் இத்தேர்வை
எழுதுகின்றனர் என்று மாவட்ட ஆட்சியர் வா. சம்பத் தெரிவித்தார்.
அவரது அறிக்கை: விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மார்ச் மாதம் பொதுத்தேர்வு தொடங்குகிறது. முன்னதாக பொதுத்தேர்வு சார்ந்த செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 4-ம் தேதி முதல் வரும் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தனித்தேர்வர்களுக்கு வரும் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை 3 நாட்கள் செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 233 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் 145 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 3 நகர்மன்ற மேல்நிலைப் பள்ளிகள், 4 மாதிரி மேல்நிலைப்பள்ளிகள், 41 நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதிப்பள்ளிகள், 40 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.
இதில் 198 பள்ளிகளில் செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது. இதில் 695 தனித் தேர்வர்களுக்கும் செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 7,265 மாணவர்கள், 7531 மாணவியர் சேர்ந்து 14,796 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 10,387 மாணவர்கள், 10,076 மாணவியர் சேர்ந்து 20,463 மாணவர்களும் சேர்ந்து மொத்தம் 17,652 மாணவர்களும், 17,607 மாணவியரும் சேர்ந்து 35,259 பேர் பிளஸ் 2 செய்முறைத் தேர்வை எழுத உள்ளனர் என தெரிவித்துள்ளார் ஆட்சியர் வா.சம்பத்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...