2050ல் கடும் தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் : சிக்கனமாக பயன்படுத்த ஆலோசனை

பெருகி வரும் மக்கள் தொகையால், 2050ம் ஆண்டில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது, என தேசிய நீர் ஆதார வளர்ச்சி மற்றும் வேளாண் தொடர்பு நிபுணர்கள் குழு எச்சரித்துள்ளது. இதை தொடர்ந்து,
தமிழகத்தில் விவசாயம் சார்ந்த அனைத்து துறைகளும் இணைந்து, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த, மாவட்டம் வாரியாக ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய நாடான இந்தியாவின் பொருளாதாரம், வேளாண் உற்பத்தியை அதிகம் சார்ந்துள்ளது. பெருகி வரும் மக்கள் தொகையால், 2001ல் தனி நபர் சராசரியில் 1,820 கனமீட்டர் என்ற அளவில் கிடைத்த நீர், 2025ல் 1,340 கனமீட்டராக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது 2050ம் ஆண்டில் கிடைக்க கூடிய நீர், சேமிக்க முடியாமல், தேவைகளை பூர்த்தி செய்ய மட்டுமே இருக்கும் நிலையில், தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. பருவமழை பொய்த்து வரும் காரணத்தாலும், நீர் பிடிப்பு மற்றும் நீர்நிலைகளில் செய்யப்படும் ஆக்கிரமிப்புகளாலும், பாசன அமைப்புகளுக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. தேசிய அளவில் பாசன திறனை 10 சதவீதம் அதிகரிப்பதன் மூலம் மட்டுமே, 166 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பில், நெல் சாகுபடி செய்யமுடியும். பாசன நிலங்களில், நீரை சேமித்து நவீன வேளாண் உத்திகளை கையாண்டு, சிக்கனமாக நீரை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக தமிழக அரசு, பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பு, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை

துறை, வேளாண் பல்கலை, கால்நடைத்துறை, மீன்வளத்துறைகள் இணைந்து மாவட்டம் வாரியாக விவசாயிகளை சந்தித்து ஆலோசனை வழங்கி வருகின்றனர். தண்ணீர் சிக்கன ஆலோசனை: அருகருகே கிணறு அமைக்கக்கூடாது. கடின பாறை பகுதிகளில் திறந்தவெளி கிணறு அமைக்கும்போது, நீளம் அதிகமாகவும், அகலம் குறைவாகவும் இருக்க வேண்டும். மின் இறைப்பு சாதனம் தேவையான குதிரைத்திறனுக்கு மேல் பொருத்தக்கூடாது. சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை, நிலநீர் வளம் குறைந்த பகுதியில் பயன்படுத்த வேண்டும். வீடு மற்றும் தொழிற்கூடங்களில், மழைநீர் சேமிப்பு திட்டத்தின் மூலம் கிணற்றின் நீர்மட்டத்தை அதிகரிக்க வேண்டும். கடற்கரையிலிருந்து 10 கி.மீ., வரை நிலத்தடிநீர் இறைப்பு அதிகமானால் கடல்நீர், நிலத்தடி நீரில் ஊடுருவி, விளைநிலங்களை பாதிக்கும். தண்ணீரின் தரத்தையும் கெடுக்கும். இந்தியாவில் ஒரு நாளைக்கு 26 ஆயிரத்து 254 மில்லியன் லிட்டர் கழிவுநீரானது முதல் மற்றும் இரண்டாம் தர நகரங்களில் வெளியேற்றப்படுகிறது. இதில் 27 சதவீதம் மட்டுமே சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. மீதமுள்ள கழிவுநீர் ஏரி, குளங்கள், ஆறுகள், வாய்க்கால்களில் விடப்பட்டு மாசடைய செய்வதோடு, நிலத்தடி நீரையும் பாதிக்கிறது. எனவே கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து விவசாயத்திற்கோ, தொழிற்சாலை பயன்பாட்டிற்கோ, மீன் வளர்ப்பிற்கோ பயன்படுத்த வேண்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...