கல்வித் துறையில் இளநிலை உதவியாளர் பணி:21 பேருக்கு பணி நியமன ஆணை-திண்டுக்கல்

இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான கலந்தாய்வில் பங்கேற்ற 21 பேருக்கும் பணி நியமன ஆணையை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழங்கினார்.
  பள்ளிக் கல்வித் துறையில் உள்ள இளநிலை உதவியாளர்கள் காலி
பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, பணி நியமனத்துக்கான கலந்தாய்வு, தமிழகத்தின் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் சனிக்கிழமை நடைபெற்றது.
  திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி இளநிலை உதவியாளர் பணிக்கு 30 இடங்களும், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு 2 இடங்களும், தொடக்க கல்வி அலுவலர் பணிக்கு ஓரிடமும் என மொத்தம் 31 பணியிடங்கள் காலியாக இருந்தன.
  திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 21 பேர் மட்டுமே எழுத்துத் தேர்வு மூலம் வெற்றி பெற்றனர். இதனால், கலந்தாய்வு தொடங்கிய சிறிது நேரத்திலேயே அந்த 21 பேரும் தங்களுக்கான பணியிடங்களைத் தேர்வு செய்தனர்.
  மொத்தமுள்ள 33 காலி பணியிடங்களில் 21 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 12 இடங்கள் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாலும் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன.
  சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் 21 பேருக்கும் பணி நியமன ஆணையை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பா. சுகுமார் தேவதாஸ் வழங்கினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...