25ம் தேதி 7 செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி-சி20 ராக்கெட்


ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி-சி20 ராக்கெட் மூலம் 7 செயற்கை கோள்களை, இஸ்ரோ நிறுவனம் வரும் 25ம் தேதி மாலை விண்ணுக்கு அனுப்புகிறது. இதற்கான சோதனைகள் தீவிரமாக நடந்து
வருகின்றன.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ இந்தாண்டில் 10 விண்வெளி திட்டங்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. முதல் திட்டமாக பி.எஸ்.எல்.வி-சி20 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வரும் 25ம் தேதி மாலை விண்ணில் ஏவப்படுகிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 7 செயற்கை கோள்கள் அனுப்பப்படவுள்ளன.இந்தியா-பிரான்ஸ் கூட்டுத் தயாரிப்பில் உருவான சரள் செயற்கை கோள், கடலின் மேற்பரப்பை ஆராய்ந்து அனுப்பும் தகவல்களை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும். கனடா நாட்டின் நியோஸ்சாட், சபையர் என்ற இரு செயற்கை கோள்களும் அனுப்பப்படவுள்ளது.ஆஸ்திரியா நாட்டின் பிரைட், யுனிபிரைட் என்ற இரு செயற்கை கோள்களும், இங்கிலாந்தின் ஸ்ட்ரனாட்&1 என்ற உலகின் முதல் ஸ்மாட் போன் செயற்கை கோளும், டென்மார்க் நாட்டின் ஆசாட் என்ற செயற்கை கோள்களும் விண்ணில் அனுப்பப்படவுள்ளன.  இந்த 7 செயற்கைகோள்களின் மொத்த எடை 700 கிலோ. ராக்கெட்டை ஏவுவதற்கான அனைத்து சோதனைகளும் நடந்து வருவதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...